டார்க் ஜெயண்ட் விமர்சனம்

கே எஸ் கிஷன் இயக்கத்தில், ஆதர்ஷ், கீர்த்தி, ஜோவிதா, அமுதவாணன், லிவிங்ஸ்டன், சோனியா அகர்வால், பாக்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் டார்க் ஜெயண்ட்.

நாயகன் ஆதர்ஷ் கடனில் தவித்து வருகிறார். ஆதர்ஷ் உடன் மனைவி ஜோவிதாவும் கீர்த்தியும் இருக்கிறார்கள்.

நண்பனான அமுதவாணனிடம் கடன் வாங்கி இருக்கிறார் ஆதர்ஷ். அந்த கடனை திருப்பி கேட்டு வருகிறார் அமுதவாணன். நாளை கண்டிப்பாக தருகிறேன் என்று சொல்லி அனுப்பி விடுகிறார்.

இந்த சூழ்நிலையில், ஆதர்ஷ்க்கு தொலைபேசியில் அழைப்பு வருகிறது கிராமத்தில் இருக்கும் தாத்தா மரணப் படத்தில் இருப்பதாகவும் தாத்தாவை சந்தித்து அவருடைய சொத்துக்களை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ளுமாறும் சொல்லப்படுகிறது.

இதனால் யாரிடமும் சொல்லாமல் அந்த ஊருக்கு மனைவி மற்றும் தங்கையுடன் செல்கிறார். 

அங்கு சென்றவர்கள் அங்கு பல ஆண்டுகள் பழமையாக இருக்கும் ஒரு மர்மமான பெரிய பங்களா வீட்டில் தங்குகிறார்கள். அங்கு அவருடைய தாத்தா மரணப் படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கிறார். 

ஒரு சில நாட்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கும் அவர்களுக்கு அடுத்த நாள் சில அமானுஷ்ய பிரச்சனைகள் அங்கு நடக்கிறது. அந்தப் பிரச்சினைகள் என்ன? அந்த மர்மமான வீட்டில் இருக்கும் அமானுஷ்யங்கள் என்ன? அவர்களை அங்கு வரவழைத்த நபர் யார்? என்ற பல கேள்விகளுக்கான பதிலே டார்க் ஜெயின்ட் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : கே எஸ் கிஷன் 

இசை : விக்னேஷ் ராஜா

ஒளிப்பதிவு : சங்கீத் மணிகோபால்

படத்தொகுப்பு : ஜி.ஜெ திருச்செல்வம் 

மக்கள் தொடர்பு : எம்.பி. ஆனந்த்