கிட்டு இயக்கத்தில், இசக்கி கார்வண்ணன், அபி நட்சத்திரா, பிரவீன் பழனிச்சாமி, காதல் சுகுமார், செல்வகுமார், சௌந்தர், குயிலி நாச்சியார், ஆஷிகா, கரன் சக்கரவர்த்தி, ஆலன் கிருஷ்ணா, சித்து குமரேசன், ஆனந்த் சௌந்தரராஜன், நேசன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஆட்டி.
மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு பழங்குடி தேயிலை தோட்ட மக்கள் வாழும் கோடை மலை கிராமத்தில் உள்ள எடக்காடு கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணான அபி நட்சத்திரா ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் அங்குள்ள குழந்தைகளுக்கு ஒரு கொட்டகையில் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்.
தன்னுடைய கிராமத்து குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று நினைக்கிறார் அதற்காக அங்குள்ள குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தருவதற்காக மனு போட்டு ஆசிரியர் ஒருவரை வரவழைக்கிறார்.
அங்கு ஆசிரியராக வரும் பிரவீன் பழனிச்சாமி அபி நட்சத்திராவின் அழகை பார்த்த மயங்கி அவர் மீது காம இச்சைப்படுகிறார். ஒரு கட்டத்தில் அபியிடம் பிரவீன் செல்வம் தவறாக நடக்கும் முயற்சிக்க அதே கன்னத்தில் அறைந்து விட்டு செல்கிறார்.
ஒரு பெண்ணிடம் அரை வாங்கியதை ஏற்றுக் கொள்ள முடியாத பிரவீன் அங்கு படிக்கும் குழந்தைகளிடம் அந்த கோபத்தை காட்டி தாக்குகிறார்.
திடீரென்று ஒரு நாள் பிரவீன் பழனிச்சாமி அவருடைய வீட்டு வாசலில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார்.
அந்தக் கொலையை விசாரிக்க வருகிறார் இன்ஸ்பெக்டரான இசக்கி கார்வண்ணன். அந்தக் கொலையை பற்றி விசாரிக்கும் சமயத்தில் ஒரு அதிர்ச்சியும் ஆச்சரியமான ஒரு தகவல் தெரிய வருகிறது.
அந்த ஆச்சரியமான தகவல் என்ன? கொலையாளியை இசக்கி காரவண்ணன் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே ஆட்டி படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குனர் : கிட்டு
திரைக்கதை : திருமுருகன்
இசை : தீசன்
ஒளிப்பதிவு : சிபி சதாசிவம்
படத்தொகுப்பு : சிஎம் இளங்கோவன்
கலை : முஜிபுர் ரஹ்மான்
சண்டை : சுரேஷ்
மக்கள் தொடர்பு : ஏ ஜான்

