மீரா கதிரவன் இயக்கத்தில், கஸ்தூரி ராஜா, ஈஷா, மாளவிகா மோனோஜ், தனஸ்ரீ, அனுஸ்ரேயா ராஜன், ஜெயஸ்ரீ பினுராஜ், அருள் குமார், ரேகா குமணன், இஸ்மத் பானு, மலர் கைசின், சன் ஷாஹுல், மாஸ்டர் தீஹான், தீக்ஷா ஸ்ரீ மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ஹபீபி.
தென் தமிழக குடும்பத்தில் இரண்டாவது தலைமுறையாக இருக்கிறார் முகமது யூசுப் (கஸ்தூரிராஜா). இவரின் குடும்பம் நெசவுத் தொழிலை நம்பி இருக்கிறது. நெசவுத்தொழிலில் பெரிதாக வருமானம் வராததால் மிகவும் நலிவடைந்து பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
கஸ்தூரி ராஜாவின் தம்பியாக ஷேக் உதுமான் (அருள்குமார்) வேலைக்காக அரபு நாட்டுக்கு செல்கிறார் அங்கிருந்து பணம் சம்பாதித்து வீட்டுக்கு அனுப்புகிறார். அதனால் கஸ்தூரி ராஜாவின் குடும்பம் சிறிது சிறிதாக முன்னேறி வருகிறது.
கஸ்தூரி ராஜாவின் மகனாக இருக்கும் அப்தாஹிர் (ஈஷா) சிறு வயதில் இருந்தே நிலோபரை (மாளவிகா மனோஜ்) காதலித்து வருகிறார்.
ஈஷா பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வி அடைந்ததால் அவரையும் வெளிநாட்டிற்கு அனுப்ப உறவினர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் ஈஷாவோ வெளிநாட்டுக்கு சென்றால் மாளவிகாவல பார்க்க முடியாமல் போய்விடும் என்று தவிர்த்து விட்டு இங்கேயே கிடைக்கிற வேலைகளை செய்து வருகிறார்.
குடும்பத்தின் நிலையை நினைத்து ஈஷாவை வெளிநாட்டுக்கு அனுப்ப நண்பர்கள் வற்புறுத்தினாலும், குடும்பத்தை பிரிந்து தன்னுடைய சித்தப்பா அங்கு கஷ்டப்படுவதையும், அதனால் சித்தி அனுபவிக்கும் வலியையும் உணர்ந்த ஈஷா தானும் அப்படி அனுபவிக்க கூடாது என்று உறுதியாக இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் தன்னுடைய காதலை மாலதி காடு சொல்லிவிட வேண்டும் என்று அனைத்தும் ஈஷா இரவு நேரத்தில் அவர்களை வீட்டிற்கு செல்கிறார் அப்பொழுது மக்களிடம் மாட்டிக் கொள்கிறார்.
அதன்பிறகு ஈஷாவின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் என்ன? அதனால் அவருடைய குடும்பத்திற்கு ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? என்பதை உணர்ச்சி பூர்வமாக சொல்லியிருப்பதே ஹபீபி.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குனர் : மீரா கதிரவன்
எழுத்தாளர் : வி.எஸ்.முகமது அமீன்
இசையமைப்பாளர் : சாம் சிஎஸ்
ஒளிப்பதிவாளர் : மகேஷ் முத்துசாமி
எடிட்டர் : மதி VS
கலை இயக்குனர் : அப்புன்னி சாஜன்
தயாரிப்பாளர்கள் : நேசம் என்டர்டெயின்மென்ட், ஷாஹுல் ஹமீத், கோவை இப்ராஹிம்
மக்கள் தொடர்பு : டீ ஒன்
ஹபீபி மனதை வருடும் ஒரு அழகான வாழ்வியல்

