பாபு விஜய் இயக்கத்தில் ஜெய், யோகி பாபு, மீனாட்சி கோவிந்தராஜன், சத்யன், ஸ்ரீமன், கருடா ராம், ஆதித்யா கதிர் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் சட்டென்று மாறுது வானிலை.
நாயகன் ஜெய் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அம்மா அப்பா யாரும் இல்லாமல் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவர். நாயகி மீனாட்சி பார்த்ததும் காதலில் விழுந்து விடுகிறார்.
அவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறார்.
மீனாட்சி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது ஜெய் அவரை காப்பாற்றுகிறார். மறுநாளே மீண்டும் மீனாட்சியை சந்திக்கும் ஜெய் நான் உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறுகிறார், அதற்கு மீனாட்சியும் உடனே சம்மதம் தெரிவித்து இருவரும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
திருமணம் முடிந்ததும் இருவருக்கும் நண்பர்கள் ஹனிமூன் புக் செய்து கொடைக்கானல் அனுப்புகிறார்கள்.
தன்னுடைய அப்பா ஒரு அமைச்சர் என்பதை ஜெயிடம் சொல்கிறார் மீனாட்சி. அதன் பிறகு மீனாட்சியை ஒரு பெரிய வீட்டில் தங்க வைக்க வேண்டும் என்று கந்துவட்டி கொடுப்பவரிடம் ஜெய் கடன் வாங்கி ஒரு பெரிய வீட்டை ஏற்பாடு செய்கிறார்.
சில நாட்களில் கடனை கட்ட முடியாமல் கந்து வட்டிக்காரரிடம் பிரச்சினை ஏற்படுகிறது ஜெயிக்கு.
மீனாட்சி கோவிந்தராஜனின் அவரது அப்பா ஒரு புறம் தேடி வருகிறார். இவர்கள் ஹனிமூன் சென்று தங்கிய ரிசார்ட் ஓனராக வரும் கருடா ராம் அந்த ரிசார்ட்க்கு வரும் தம்பதியர்கள் அனைவரையும் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வைத்து கொள்கிறார்.
பிறகு அதனை இணையதளத்திற்கு விட்டு பல கோடிகளை சம்பாதித்து வருகிறார்.
ஒரு சூழ்நிலையில் கருடா ராம் வீடியோ எடுத்து வைத்திருப்பது ஜெய்க்கு தெரிய வருகிறது. அதன் பிறகு ஜெய் என்ன செய்தார்? அமைச்சர் ஆட்கள் இவர்களை என்ன செய்தார்கள்? கந்துவட்டிக்காரர்களிடமிருந்து ஜெய் தன்னை எப்படி காப்பாற்றிக் கொண்டார்? என்பதே சட்டென்று மாறுது வானிலை படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு நிறுவனம் : பிவி பிரேம்ஸ்
இயக்கம் : பாபு விஜய்
இசை : கிருஷ் கோபாலகிருஷ்ணன்
படத்தொகுப்பு : டார்லிங் ரிச்சட்சன்
ஒளிப்பதிவு : ரிச்சர்ட் எம் நாதன்
மக்கள் தொடர்பு : சதீஷ் (ஏய்ம்)

