மிஸ்டர் எக்ஸ் விமர்சனம்

மனு ஆனந்த இயக்கத்தில், ஆர்யா, கௌதம் கார்த்திக், ஜெயபிரகாஷ், காலி வெங்கட், ரைசா வில்சன், அதுல்யா ரவி, மஞ்சுவாரியர், சரத்குமார் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் மிஸ்டர் எக்ஸ்.

சரத்குமார் இந்திய வெளிநாட்டு உளவு அமைப்பான ராவில் உளவாளியாக பணியாற்றுகிறார். அணு ஆயுதம் தயாரிப்பதற்கான ஒரு மூலப்பொருளை பல வருடங்களாக பல நாடுகளுக்கு கடந்து சென்று அதனை பாதுகாத்து வருகிறார். 

இதற்காக தன்னுடைய வாழ்க்கையையும் குழந்தைகளையும் அர்ப்பணித்து வேலை செய்த சரக்குமாரை ரஷ்ய ராணுவம் கைது செய்கிறது. அவரை கைது செய்வதோடு மட்டுமல்லாமல் அணு ஆயுதம் செய்வதற்கு தேவையான மூலப் பொருள்களையும் கைப்பற்றி அதனை பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கு முடிவு செய்கிறது.

இந்த திட்டத்தை முறியடித்து சரத்குமாரையும் அணு ஆயுத மூலப் பொருட்களையும் இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக மஞ்சு வாரியர் தலைமையிலான ஒரு ரா குழு நியமிக்கப்படுகிறது.

அந்த குழு மூலமாக அங்கு செல்லும் கௌதம் கார்த்திக் அவர்களுக்கு எதிராகவே மாறி சரத்குமாரையும் அணு ஆயுத பொருட்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.

மற்றொரு உளவாளியான ஆர்யாவை அந்த பணியில் ஈடுபட்டு சரத்குமாரை காப்பாற்றி அங்கு இருக்கும் அணு ஆயுதப் பொருளை தயாரிக்க பயன்படும் மூலப் பொருளையும் இந்தியாவிற்கு எடுத்து வர ஏற்பாடு செய்கிறார் மஞ்சு வாரியர்.

மஞ்சுவாரியரின் திட்டப்படி ஆர்யா சரத்குமாரை மீட்டு அணு ஆயுதம் தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருளையும் அவர்களிடம் மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வந்தாரா? இல்லையா? என்பதே மிஸ்டர் எக்ஸ் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

எழுத்து & இயக்கம் : மனு ஆனந்த்

தயாரிப்பு : ஸ்ரீ வினீத் ஜெயின் | எஸ் லக்ஷ்மன் குமார் 

இசை : திபு நினன் தாமஸ் 

சண்டை பயிற்சி : ஸ்டண்ட் சில்வா 

கலை : இந்துலால் கவீத் | சேகர் பி

மக்கள் தொடர்பு : ஏ ஜான்