மாம் திரைவிமர்சனம்

டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிகிறார் ஸ்ரீதேவி. அத்னான் சித்திக் ஸ்ரீதேவியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். இதில் முதல் மனைவிக்கு பிறந்த மகள் தான் சாஜல் அலி. சாஜலும் ஸ்ரீதேவி வேலை பார்க்கும்  பள்ளியிலேயே படிக்கிறாள். ஸ்ரீதேவிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். எனினும் சாஜல் அலியை, தன் மகளாக பார்க்கிறார் ஸ்ரீதேவி. ஆனால் ஸ்ரீதேவியை அம்மாவாக ஏற்றுக் கொள்ள சாஜல் அலி மறுக்கிறாள். மாறாக ஸ்ரீதேவியை மேம் என்றே அழைக்கிறாள். இவ்வாறாக நாட்கள் மெல்ல கடந்து செல்ல, தன்னுடன் படிக்கும் தோழியின் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க சாஜல் அலி செல்கிறாள்.

இந்நேரம் பார்த்து வேலை விஷயமாக அத்னான் சித்திக் வெளியூர் சென்று விடுகிறார். இரவு வெகு நேரமாகியும் சாஜல் வராததால் ஸ்ரீதேவி நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்க்க, சாஜல் அங்கு இல்லை. சாஜலுடன் படிக்கும் சக மாணவன், அவனது நண்பர்கள் இணைந்து சாஜலை கடத்திக் கொண்டு போய் கற்பழித்து விடுகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நவாசுதீன் சித்திக் வருகிறார். அவரது பிரயாசையின் பேரில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார். சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி குற்றாவாளிகள் அனைவரும் இந்த வழக்கில் இருந்து தப்பித்து விடுகின்றனர். 

தன்னை இந்த நிலைமைக்கு ஆழ்த்தியவர்களுக்கு தண்டனை வாங்கித் தர முடியவில்லையே என்று சாஜல் மனக் கஷ்டத்தில் குமுறுகிறாள். மகளின் இந்த நிலைமையை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்ரீதேவி, குற்றவாளிகளை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறாள். அதன்படி துப்பறிவாளரான அக்‌ஷய் கண்ணாவின் உதவியுடன், குற்றவாளிகளை ஸ்ரீதேவி எப்படி பழிவாங்குகிறார்? எந்த மாதிரியான தண்டனையை அவர்களுக்கு வழங்கினார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? சாஜல் அலி, ஸ்ரீதேவியை அம்மாவாக ஏற்றுக் கொண்டாளா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

 இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்