அந்த 7 நாட்கள் விமர்சனம்

எம் சுந்தர் இயக்கத்தில் அஜிதேஸ், ஸ்ரீஸ்வேதா, நமோ நாராயணன், பாக்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் அந்த ஏழு நாட்கள். 

எம்எல்ஏ சீட்டிற்காக எதையும் செய்யக்கூடிய நபராக இருக்கும் நமோ நாராயணன் மகனாக நாயகன் அஜிதேஸ்.

விண்வெளி சார்ந்த அறிவியல் படிப்பை  அஜிதேஸ் படித்து வருகிறார். நாயகி ஸ்வேதா ஜூனியர் வக்கீலாக பணியாற்றி வருகிறார். 

அஜிதேஸ்க்கும், ஸ்ரீ ஸ்வேதாவுக்கும் இடையே காதல் வளர்கிறது. 

நாயகி ஸ்ரீ ஸ்வேதாவின் அப்பா காதலுக்கு பெரும் எதிரியாக இருக்கிறார். 

இந்த சமயத்தில் அமைச்சரின் மகளுக்கு தன் மகனை கட்டிக் கொடுக்க வேண்டும் என்றும், அதனால் எம்எல்ஏ பதிவி கிடைக்கும் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார் நமோ நாராயணன். 

ஒரு நாள் பழங்காலத்து பைனாகுலர் வாங்கும் அஜிதேஸ் கண்களில் ஒரு வித்தியாசம் ஏற்படுகிறது. அவர் யாரையெல்லாம் கண்ணோடு கண் நேராக பார்க்கிறாரோ அவர்களுடைய மரணத்தைப் பற்றியும் எத்தனை நாட்களில் இறந்து விடுவார் என்றும் தெரிந்து விடுகிறது. 

இந்த சூழ்நிலையில், ஒரு நாள் தன்னுடைய காதலியின் கண்களை பார்க்கிறார் காதலி ஸ்ரீ ஸ்வேதா இன்னும் ஏழு நாட்கள் மட்டும்தான் உயிரோடு இருக்கப் போவதாக தெரிய வருகிறது இதனால் மணமுடைந்து போகிறார். 

நாயகியிடம் நான் உன்னை எப்படியாவது காப்பாற்றி விடுவேன் என்று கூறுகிறார். நாயகியை காப்பாற்ற அஜிதேஸ் என்ன செய்தார்? அவரை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதை அந்த 7 நாட்கள் படத்தோட மீதிக்கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இயக்கம் : எம் சுந்தர் 

ஒளிப்பதிவு : கோபிநாத் துரை 

இசை : சச்சின் சுந்தர்

தயாரிப்பு : முரளி கபிர்தாஸ் 

மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்