குமார சம்பவம் விமர்சனம்

வீனஸ் இன்ஃபோர்ட் டைமண்ட் கே ஜே கணேஷ் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில், குமரன் தியாகராஜன், பயல், ஜி எம் குமார், குமரவேல் பால சரவணன், வினோத் சாகர், முன்னா சிவா, லிவிங்ஸ்டன், அரவிந்த் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் குமாரசம்பவம்.

 

நாயகன் குமரன் தியாகராஜன் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருந்து வருகிறார். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

 

குமரன் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் குமரவேல் இறந்து விடுகிறார். அந்த மரணத்தை விசாரிக்க வரும் காவல்துறை அது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறது.

 

அதனால் குமரனை சந்தேக படுகிறது காவல்துறை. குமரனை காவல்துறை விசாரணை வளையத்தில் கொண்டு வருகிறது.

 

ஒரு மாதத்தில் வீட்டை விற்று படத்தை இயக்க வேண்டும் என்று இருக்கும் சூழ்நிலையில் குமரனுக்கு இது பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

 

குமரவேலை கொன்றது யார்? குமரன் கொலையை செய்யவில்லை என்று எப்படி நிரூபித்தார்? குமரனின் சினிமா ஆசை நிறைவேறியதா? இல்லையா? என்பதே குமார சம்பவம் படத்தோட மீதிக்கதை.

 

தொழில்நுட்ப கலைஞர்கள் 

 

தயாரிப்பு : கேஜி கணேஷ் 

இயக்கம் : பாலாஜி சக்திவேல் 

இசை : அச்சு ராஜா மணி 

ஒளிப்பதிவு: ஜெகதீஷ்

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்