பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் விமானத்தில் இலவசமாக செல்ல, சலுகை – ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ் விமானம் சவுதி அரேபியாவிலிருந்து கேரளா மாநிலம் கொச்சி வந்துகொண்டிருந்த போது விமானத்தில் இருந்த நிறைமாத கர்ப்பிணிக்கு பிரசவவலி ஏற்பட்டது. உடனடியாக விமானத்தில் பயணம் செய்த பயிற்சி மருத்துவர் ஒருவர் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. அதில் அந்தப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதனால் கொச்சியில் இறங்கவேண்டிய விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டு அங்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தங்களது விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் விமானத்தில் இலவசமாக செல்ல, சலுகை அறிவித்துள்ளது.