பீச்சாங்கை – சினிமா விமர்சனம்

 

பிரபலமான பிக்பாக்கெட் திருடனாக வருகிறார் நாயகன் கார்த்திக். இவருக்கு இவருடைய பீச்சாங்கைதான் பலமே. அந்த கையால் நிறைய திருட்டு வேலைகளை செய்திருக்கிறான். திருடனாக இருந்தாலும் அதிலும் மிகவும் நேர்மையாக இருந்து வருகிறார் கார்த்திக். இவருடன் ஒரு பெண்ணும், இளைஞனும் சேர்ந்து இந்த திருட்டு தொழிலை நடத்தி வருகிறார்கள்.

ஒருமுறை நாயகி அஞ்சலி ராவ் தன்னுடைய பணப்பையை நாயகனின் நண்பர்களிடம் பறிகொடுக்க, அந்த பணத்தை திரும்ப கொடுக்கும்வரும் நாயகன் மீது அவளுக்கு பாசம் வர, இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். இதற்கிடையில், அரசியல்கட்சி தலைவரான எம்.எஸ்.பாஸ்கர் தனக்கு நெருக்கமான விவேக் பிரசன்னாவுக்கு கட்சியில் முக்கிய பதவியை கொடுக்க, அதை பொறுத்துக்கொள்ள முடியாத கட்சியின் மூத்த நிர்வாகியான வெங்கடேசன், விவேக் பிரசன்னாவுக்கு எதிராக சதிவலையை பின்ன ஆரம்பிக்கிறார்.

இந்நிலையில், விவேக் பிரசன்னா, தான் பெண்களிடம் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்து அதை பார்த்து ரசிப்பதை ஒரு பழக்கமாக கொண்டு வருகிறார். அதை தெரிந்துகொண்ட வெங்கடேசன், அந்த செல்போனை திருடிவிட்டால், அந்த வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு விவேக் பிரசன்னாவை அவமானப்படுத்திவிடலாம் என்று முடிவு செய்கிறார். அதன்படி, அந்த செல்போனை திருடிவர தனது ஆட்களிடம் சொல்கிறார்.

அந்த பொறுப்பு எங்கெங்கோ சென்று கடைசியில் நாயகன் கைக்கு வருகிறது. இதற்கிடையில், நாயகன் ஒரு விபத்தில் சிக்கி அவனது பீச்சாங்கையில் அடிபட்டு விடுகிறது. ‘ஏலியன் ஹேண்ட் சிண்ட்ரோம்’ என்ற நோயால் அவரது பீச்சாங்கை பாதிக்கப்படுகிறது. இதனால், அவருடைய பீச்சாங்கை கட்டுப்பாட்டில் இல்லாமல் அதுவே தனியாக செயல்பட ஆரம்பிக்கிறது. இதனால், நாயகனுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதற்கிடையில் வெங்கேடஷனின் ஆட்கள் சொன்ன செல்போனையும் இவர் திருடி விடுகிறார்.

இதன்பிறகு, கார்த்திக்கின் நிலைமை என்னவாயிற்று? அவரது கட்டுப்பாட்டில் இல்லாத அவரது பீச்சாங்கையால் அவர் என்னென்ன பிரச்சினைகளை சந்தித்தார்? இவருடைய காதல் என்னவாயிற்று? என்பதே படத்தின் மீதிக்கதை.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்