நீதான் ராஜா – சினிமா விமர்சனம்

நாயகனான நிரஞ்சன் தனது நண்பனை பார்ப்பதற்காக ஒரு கிராமத்துக்கு வருகிறார். தன்னுடைய தங்கையை எப்படியாவது டாக்டருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். இந்நிலையில், தன்னுடைய நண்பன் மூலம் நாயகியின் அறிமுகம் கிடைக்கிறது. நாயகி காயத்ரி அந்த ஊரில் ஆசிரமம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். அந்த ஆசிரமத்தை கைப்பற்றுவதற்கு, அந்த ஊரில் வசிக்கும் செல்வந்தரான காக்கா ஆசைப்படுகிறார். இதனால், நாயகிக்கும் ஆசிரமத்திற்கும் பல்வேறு இடைஞ்சல்களை கொடுக்கிறார். இதையெல்லாம் நாயகனிடம் சொல்கிறாள் நாயகி. ஆனால், நாயகனோ அவளது பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாததுபோல் நடந்து கொள்கிறார். இதனால் நாயகன் மீது நாயகிக்கு வெறுப்பு வருகிறது. 

ஆனால், மறுநாள் ஆசிரமத்தை தாக்க வரும் காக்காவின் ஆட்கள் அனைவரையும் நாயகன் அடித்து துவம்சம் செய்கிறார். அதன்பிறகு, ஆசிரமத்தை தாக்க சொன்ன காக்காவை தேடி அவரது வீட்டுக்கு செல்கிறார். அங்கு சென்றதும், காக்காவின் அண்ணன் நாயகனை முன்பே சந்தித்ததுபோல் கூப்பிட்டு தன்னுடன் அழைத்து செல்கிறார். பிறகு நாயகன் அவர்களிடமே வேலைக்கு சேர்கிறார். இது நாயகிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. காக்காவிடம் நல்ல பிள்ளையாக நடந்துகொள்ளும் நாயகன், நாயகியிடமிருந்து ஆசிரமத்தை கைப்பற்றி அவர்களிடம் ஒப்படைப்பதாக கூறிவிட்டு செல்கிறார்.

அதன்பிறகு உண்மையில் என்ன நடந்தது? நாயகன் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்? அவருடைய தங்கையை மருத்துவ படிப்பு படிக்க வைக்கவேண்டும் என்று அவரது நினைவில் அடிக்கடி வருவதன் காரணம் என்ன? என்ன காரணத்திற்காக அவர் இந்த கிராமத்திற்கு வந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை. 

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்