ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, ஜல்லிக்கட்டுக்குத் தடைவிதிக்க காரணமாக இருந்த பீட்டா அமைப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தது. அதோடு இந்த அமைப்பிற்கு ஆதரவாக இருந்த நடிகர் நடிகைகளை எதிர்த்தும் போராட்டங்கள் நடைபெற்றது. திரிஷா, தனுஷ், விஷால் உள்ளிட்ட நடிகர்கள் பீட்டா அமைப்புக்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்தனர். ஆனால் சில நடிகர், நடிகைகள் மட்டும் இன்றும் பீட்டா அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் அவர்கள் பீட்டாவின் விளம்பர படங்களிலும் நடித்து வருகின்றனர். தமிழகத்தில் கத்தி படத் தயாரிப்பின் போது ஈழத் தமிழர்களுக்கு எதிரான தயாரிப்பு நிறுவனம் என லக்கா நிறுவனத்திற்கு எதிராகவும் குரல் எழுந்தது. லைக்கா நிறுவனம் 400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கும் படம் 2.0. இந்தப் படத்தை இயக்குனர் சங்கர் இயக்குகிறார். இந்தப் படத்தின் ஹீரோவாக நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறர். இவர் இலங்கையில் நடந்த விழாவிற்குச் செல்வதாக அறிவித்தார். தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை அடுத்து ரஜினி அந்தப் பயணத்தையே ரத்து செய்தார்.
ரஜினியின் குடும்பமே பீட்டா அமைப்பிற்கு ஆதரவாகச் செயல்படுவதாக ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இளைஞர்களால் குற்றம் சுமத்தப்பட்டது. இந்த நிலையில் ரஜினி படத்தின் கதாநாயகி எமிஜாக்சனும் பீட்டா அமைப்பு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார். அதோடு மட்டும் அல்லாமல் பீட்டா அமைப்பின் விளம்பர படத்திலும் அவர் நடித்துள்ளார். தமிழர்களுக்கு எதிராகச் செயல்படும் பீட்டா அமைப்பிற்கு ரஜினி குடும்பம் ஆதரவாகச் செயல்படுவதோடு அவரின் படத்தில் நடித்த நாயகி எமிஜாக்சன் விளம்பர படத்தில் நடித்து இருப்பது ரஜினி ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அனைவரையும் கோபம் கொள்ள வைத்துள்ளது.