கார்த்திகேயன் சந்தானம், ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குனர் ஹரி இயக்ககத்தில், விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, விஜயகுமார், டெல்லி கணேஷ், யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன், ஜெயபிரகாஷ், முரளி சர்மா, ஹரிஷ் பெராடி, முத்துக்குமார், “நான் கடவுள்” ராஜேந்திரன், கஜராஜ், VTV கணேஷ், ஒய்.ஜி. மகேந்திரன், மோகன்ராம், சி.ரங்கநாதன், கணேஷ் வெங்கட்ராம், ‘கும்கி’ அஸ்வின், அஞ்சலி தேவி, துளசி ஆகியோர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ரத்னம்.
தமிழ்நாடு ஆந்திரா பார்டரில் ஒரு மிகப்பெரிய பஸ் கொள்ளையுடன் படம் ஆரம்பமாகிறது.
சிறுவயதில் தாயை இழந்து விட்டு, சமுத்திரகனியின் ஆதரவில் வாழ்ந்து வருகிறார் விஷால். எம்எல்ஏவாக மாறும் சமுத்திரக்கனிக்கு ஒரு கட்டத்தில் அடியாளாக மாறி, காவல்துறை தலையிட்டு சரி செய்ய வேண்டிய அநியாயங்களையும் பிரச்சனைகளையும் விஷால் அடித்து நொறுக்கி சரி செய்கிறார்.
இந்த சமயத்தில் நீட் தேர்வு எழுத வரும் பிரியா பவானிசங்கரை ஆந்திர கூலிப்படை கும்பல் கொலை செய்ய முயற்சி செய்ய அவரைக் காப்பாற்றி தேர்வு எழுத அனுப்புகிறார். மீண்டும் மீண்டும் பிரியா பவானிசங்களை கொலை செய்ய முயற்சிகள் நடக்கிறது.
பிரியா பவானி சங்கர் யார்? பிரியா பவானி சங்கரை கொலை செய்ய முயற்சி செய்யும் அடியாட்கள் யார்? இந்த பிரச்சனையில் விஷால் எப்படி சம்பந்தப்படுகிறார்? பிரியா பவானி சங்கரை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதை இறுதி காட்சி வரை அதிரடியாகவும் பரபரப்பாகவும் சொல்லி இருக்கும் படமே ரத்னம்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் – ஹரி
இசை – தேவி ஸ்ரீ பிரசாத்
டிஓபி – எம் சுகுமார்
ஸ்டண்ட் – கனல் கண்ணன், பீட்டர் ஹெயின், திலிப் சுப்பராயன், விக்கி
பாடல் – விவேகா
கலை இயக்குனர் – பி வி பாலாஜி
எடிட்டர் – டி எஸ் ஜெய்
நடன இயக்குனர் – தினேஷ்
ஸ்பெஷல் எஃபெக்ட் – சேது
தயாரிப்பு நிர்வாகி – ராஜேந்திரன்
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் – பி.எஸ்.கணேஷ்
நிர்வாகத் தயாரிப்பாளர் : அசோக் நாராயணன் எம்
இணை தயாரிப்பாளர்: பவன் நரேந்திரன்
இணை தயாரிப்பு: கல்யாண் சுப்ரமணியம், அலங்கார பாண்டியன் (இன்வேனியோ ஆரிஜின்)
தயாரிப்பு: கார்த்திகேயன் சந்தானம், ஜீ ஸ்டுடியோஸ்
தயாரிப்பு பேனர்: ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் & ஜீ ஸ்டுடியோஸ்
ஆதித்யா இசையில் ஆடியோ
PRO : நிகில் முருகன் (தமிழ்)