டி சீரிஸ், கெட்அவே பிக்சர்ஸ், ரூக்ஸ் மீடியா தயாரிப்பில், பிஜாய் நம்பியார் இயக்கத்தில், அர்ஜுன்தாஸ், காளிதாஸ் ஜெயராம், டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், அம்ருதா சீனிவாசன், மெர்வின் ரோஜாரியோ ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் போர்.
அர்ஜூன் தாஸ் மருத்துவ கல்லூரியின் சீனியர் மாணவராக இருக்கிறார். அவர் மீது ஜூனியர் மாணவராக வரும் காளிதாஸ் வெறுப்புடன் இருக்கிறார்.
இந்த வெறுப்பு பகையாக மாறி, அஜந்தா நண்பர்களுடன் அவருக்கு சம்பந்தப்பட்டவர்களுடனும் பிரச்சனையை ஏற்படுத்தி அந்த பிரச்சனை மோதலாக மாறுகிறது.
காளிதாசின் இந்த செய்கையை தெரிந்து கொண்டு ஒதுங்கி செல்லும் அர்ஜுன் தாஸ், ஒரு சமயத்தில் பொறுமை எழுந்து கோபப்பட்டு காளிதாஸ் ஏற்பட்ட பிரச்சனையை முடிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.
இது ஒரு புறம் இருக்க மறுபுறம் கல்லூரியில் நடைபெறவிருக்கும் மாணவர் தலைவர் தேர்தலில் அரசியல் தலைவரின் மகளை எதிர்த்து போட்டியிடும் சக மாணவி மீது சாதிக் கொடுமை நடக்கிறது. அதை எதிர்த்து மாணவர்கள் நடத்தும் போராட்டத்தினால் அரசியல்வாதியின் மகள் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்கிறது.
இதனால் அவருடைய அரசியல் வாழ்க்கை பிரச்சனைக்குள்ளாகிறது. தன்னை எதிர்த்துப் போட்டியிட்டு தனக்கு பிரச்சனை கொடுப்பவர்களை தீர்த்து கட்ட முடிவு செய்து கல்லூரியில் கல்லூரி மாணவர்களிடம் நடக்கும் மோதலை பயன்படுத்திக் கொள்கிறார்கள் இறுதியில் என்ன நடந்தது? காளிதாஸ் ஜெயராம், அருண் தாஸ் போர் முடிவுக்கு வந்ததா இல்லையா என்பதை போர் படத்துடன் மீதி கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : பிஜாய் நம்பியார்
இசை : சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கௌரவ் கோட்கிண்டி பின்னணி இசை : மாடர்ன் டேப் ஸ்கோர் (ஹரிஷ் வெங்கட் & சச்சிதானந்த் சங்கரநாராயணன்), கௌரவ் கோட்கிண்டி
தயாரிப்பு : டி சீரிஸ், கெட்அவே பிக்சர்ஸ், ரூக்ஸ் மீடியா
மக்கள் தொடர்பு : சதீஷ்குமார்