V. துரை ராஜ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஜான் கிளாடி இயக்கத்தில், சையத் மஜித், மேக்னா எலன், விஜி சேகர், ஜான் கிளாடி, சரண்யா ரவிச்சந்திரன், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், ஆனந்த் குமார், ராஜன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பைரி.
படத்தின் ஆரம்பித்தில், வில்லுப்பாட்டு ஒன்று பாடப்படுகிறது. அந்த பாடலுக்குள்ளே படம் ஆரம்பமாகிறது.
கன்னியாகுமரி அருகே இருக்கும் நாகர்கோவிலை சுற்றி செல்கிறது. புறா ரேஸ் விடுவது தான் அந்த பகுதி மக்களுக்கு ஒரு பெரிய விளையாட்டாக இருந்து வருகிறது. நாகர்கோவில் மக்கள் புறா ரேஸை வீர விளையாட்டாக கருதுகின்றனர்.
நாயகன் சையத் மற்றும் அவரது நண்பர்களும் புறா வளர்ப்பதை தங்களது வாழ்வாக எண்ணி வாழ்ந்து வருகின்றனர்.
நாயகன் சையத்தின் அம்மா விஜி சேகர். ஒரே மகன் என்பதால், அவர் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார்.
புறா ரேஸ் விட்டு, சையத்தின் தாத்தா, சித்தப்பா என பலர் வாழ்க்கையை சீரழித்துவிட்டதால், தனது மகனை நன்கு படிக்க வைத்து நல்லதொரு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று நினைக்கிறார் விஜி சேகர்.
அதற்காக, மகன் ராஜலிங்கத்தை இன்ஜின்யரிங் கல்லூரியில் சேர்த்து விடுகிறார். கல்லூரி முடிக்கும் போது சில பேப்பர் அறியர் வைத்துள்ளார். அந்த பேப்பரை எழுதி முடிக்கும் வரை வீட்டில் புறா வளர்த்துக் கொள்ள அம்மாவிடம் அனுமதி வாங்கி வளர்க்கிறார் ராஜ லிங்கம்.
புறா வளர்ப்பில் அதிக ஆர்வம் கொண்ட ராஜலிங்கம், அடிக்கடி பக்கத்து வீட்டு இளைஞர்களுடன் பிரச்சனையையும் மோதலையும் வளர்த்துக் கொள்கிறார்.
தன்னுடைய பகுதியில் இருக்கும் இளைஞர்கள் நல்ல வழியில் பயணிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார் ரமேஷ் ஆறுமுகம்
இந்த நிலையில் ஊரில் புறா ரேஸுக்கான நாள் நெருங்குகிறது. புறா ரேஸில் அம்மாவின் எதிர்ப்பையும் மீறி கலந்து கொள்கிறார் ராஜலிங்கம்.
அதே ஊரில், பல கொலைகளை செய்து பெரிய ரெளடியாக இருக்கும் வில்லனான சுயம்பும் புறா ரேஸில் கலந்து கொள்கிறார்.
இந்த புறா ரீசில் சுயம்பு விற்கும் ராஜலிங்கத்திற்கும் இடையே நேரடியாகவே பிரச்சனை ஏற்படுகிறது இந்தப் புறா ரேஷன் பிரச்சனையால் ராஜலிங்கத்தை சுயம்பு கொலை செய்ய முயற்சிக்கிறார்.
சுயம்புவின் கொலை முயற்சியில் இருந்து ராஜலிங்கம் தப்பித்தாரா? புறா ரேஸ் நடந்ததா? இல்லையா? என்பதே பைரி படத்தின் மீதி கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தயாரிப்பு : V. துரை ராஜ்
இயக்கம் : ஜான் கிளாடி
ஒளிப்பதிவு : ஏ வி வசந்த குமார்
இசை : அருண் ராஜ்
படத்தொகுப்பு : ஆர் எஸ் சதீஷ் குமார்
மக்கள் தொடர்பு : நிகில் முருகன்