பாசக்கார பய விமர்சனம்

கதாநாயகி காயத்ரி ரெமாவை நாயகன் சக்தி ஒரு தலையாக காதலிக்கிறார். அவரது காதலை ஏற்க மறுக்கும் காயத்ரி ரெமா, தனக்காக தனது வாழ்க்கையை தொலைத்து சிறைக்கு சென்ற தனது மாமா விக்னேஷ்க்கு மட்டுமே தன் மனதில் இடம் இருப்பதாக சொல்லி விடுகிறார்.

சிறையில் இருந்து வெளியே வரும் காயத்ரியின் மாமன் விக்னேஷ், அவரிடம் பாசமாக நடந்துக்கொண்டாலும் அவரை திருமணம் செய்ய மறுக்கிறார். காயத்ரி ரெமாவோ விக்னேஷை மட்டுமே திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருக்க, விக்னேஷ் காயத்ரிக்கு பிடிக்காதவாறு பல காரியங்களை செய்து அவருக்கு வெருப்பு ஏற்படுமாறு நடந்து கொள்கிறார். இறுதியில் யாருடைய காதல் வெற்றி பெற்றது, விக்னேஷ் ஏன் சிறைக்கு சென்றார் என்பதையும் சொல்வது தான் ‘பாசக்கார பய’ படத்தோட மீதி கதை.

நடிகை-நடிகர்கள்:

விக்னேஷ் (குணா), காயத்ரி (தேன்மொழி, பிரதாப் (சுப்ரமணி), கஞ்சா கருப்பு (மதுரபாண்டி), தேனி முருகன் (மந்திரவாதி), விவேக பாரதி (பெருமாள்) மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பு – காயன் மிக்சர்ஸ்
நற்கவி டாக்கீஸ்
வசனம் – பி.சேதுபதி
கதை திரைக்கதை இயக்கம் – விவேகபாரதி
ஒளிப்பதிவு – கே.வி.மணி
இசை – சௌந்தர்யன்
எடிட்டிங் – எஸ்.பி.அகமது
நடனம் – சாய் சரவணன்
ஸ்டண்ட் – சாய் சாரா
மக்கள் தொடர்பு – வெங்கட்