நதி விமர்சனம் 3/5

மதுரையில் ஆட்டோ ஓட்டும் முனீஸ்காந்த் அவருடைய மகன் சாம் ஜோன்ஸ் (தமிழ்) கல்லூரியிலும் மகள் பள்ளியிலும் படிக்கின்றனர். கல்லூரியில் ஒன்றாக படிக்கும் கயல் ஆனந்தி (பாரதி) பேட்மிண்டன் வீரரான தமிழுடன் நட்புடன் பழகுகிறார். நட்பு பாரதிக்கு மட்டும் காதலாக மாறுகிறது. இது பாரதியின் சாதி வெறி பிடித்த அரசியல்வாதி பெரியப்பா வேலராமூர்த்தி, அப்பா வெங்கடேஷிற்கு தெரிய வருகிறது. ஏற்கனவே பாரதியின் தாய் மாமன் கரு.பழனியப்பன் அசியல்வாதி வேலராமமூர்த்தியுடன் ஒரே கட்சியில் இருந்தாலும் பெரிய பதவி கிடைக்காத ஆத்திரத்தில் பகையுடன் இருக்கிறார். இவர்களின் நட்பை காதல் என்று நினைத்து வேலராமூர்த்தி வேறு ஒரு கொலையை செய்து தமிழை சிக்க வைத்து ஜெயிலுக்கு அனுப்புகிறார். இதை சற்றும் எதிர்பாராத தமிழ் தன் விளையாட்டு, எதிர்காலம், தன் குடும்ப சூழ்நிலை நினைத்து நிலை குலைந்து போகிறார். இதைக் கேள்விப்படும் பாரதி, தமிழை காப்பாற்ற மாமா கருபழனியப்பனிடம் முறையிட்டு தழிழை ஜாமினில் வெளியே கொண்டு வருகிறார். அதன் பின்தான் பாரதிக்கு தன்மேல் காதல் இருப்பது தெரிய வருகிறது. பிறகு பாரதியும் தமிழை காதலிக்க ஆரம்பிக்கிறார். வேலராமூர்த்தி எப்படியும் பழி வாங்குவார் என்று பயப்படுகிறார். வேலராமமூர்த்தியிடமிருந்து தமிழை காப்பாற்ற என்ன முடிவு செய்கிறார்? கரு.பழனியப்பன் பதவிக்காக என்ன சூழ்ச்சி செய்கிறார்? இறுதியில் காதலர்கள் சேர்ந்தார்களா? என்பதுதான் படத்தோட மீதிக்கதை.

நடிகை-நடிகர்கள்:

சாம் ஜோன்ஸ், கயல் ஆனந்தி, வேல ராமமூர்த்தி, ஏ,வெங்கடேஷ், கரு பழனியப்பன், முனிஷ்காந்த், பிரவீன்குமார், மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

ஒளிப்பதிவு: எம்.எஸ். பிரபு
இசையமைப்பாளர்: திபு நினன் தாமஸ்
எடிட்டர்: ஆர்.சுதர்ஷன்
வசனங்கள்: லக்ஷ்மி சரவணகுமார்
கலை இயக்குனர்: விஜய் தென்னரசு
நடன இயக்குனர்: தினேஷ், விஜயா ராணி
மக்கள் தொடர்பு : ஏய்ம் சதீஷ்