ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்கள் தொடர்ந்து 8 ஆம் ஆண்டாக நாசா மற்றும் என் எஸ் எஸ் இணைந்து நடத்திய விண்வெளி நிலைதங்கள் போட்டியில் ( 2021 ஆம் ஆண்டு ) உலக சாம்பியனாக வெற்றி முழக்கமிட்டனர்.
இந்தபோட்டியில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளிருந்து மாணவர்கள் பங்கேற்றனர் . உலகளவில் 160 ஆய்வு தொகுப்புகள் பரிசுக்காக தேர்ந்துடுக்கப்பட்டது. இதில் இந்தியாவிலிருந்து மட்டுமே 107 ஆய்வு தொகுப்புகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. அதிலும் 64 ஆய்வு தொகுப்புகள் அதாவது 50% மேற்பட்ட ஆய்வு தொகுப்புகள் ஸ்ரீசைதன்யா பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது .ஸ்ரீ சைதன்யா பள்ளியின் மேலாளர் டாக்டர் .பி .எஸ் .ராவ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளார் .
உலகளவில் பரிசுக்காக தேர்வுபெற்ற திட்டங்கள் – 160 .
இந்தியளவில் பரிசுக்காக தேர்வுபெற்ற திட்டங்கள் – 107 / 160 ( 67 %).
ஸ்ரீ சைதன்யா பள்ளியிலிருந்து தேர்வுபெற்ற திட்டங்கள் – 64 / 107 ( 60 % ).
உலகளவில் தேர்ச்சியில் ஸ்ரீ சைதன்யாவின் பங்கு – 64 / 160 ( 40 % ) .
ஸ்ரீ சைதன்யா பள்ளியின் தேர்ச்சிபெற்ற ஆய்வுத்தொகுப்புகளின் விவரங்கள் .
உலகளவில் முதல் பரிசுகள் – 9 .
உலகளவில் இரண்டாம்பரிசுகள் – 9.
உலகளவில் மூன்றாம் பரிசுகள் – 11 .
மாண்புமிகு குறிப்புக்கள் – 35 .
மொத்த பரிசு வென்ற திட்டங்கள் – 64 .
இந்த 64 பரிசுவென்ற திட்டங்களை தயாரிப்பதில் மொத்தம் 758 மாணவர்கள் பங்கேற்றதாக டாக்டர்.பி.எஸ். ராவ் தெரிவித்துள்ளார்.
1 , 2 மற்றும் 3 ஆம் பரிசுகளில் எண்ணிக்கைளோ அல்லது பரிசு வென்ற திட்டங்களின் எண்ணிக்கைளோ அல்லது திட்டங்களில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கைளோ, இந்தியாவின் மற்றுமின்றி உலகிலே வேற எந்த பள்ளியும் ஸ்ரீ சைதன்யாவுடன் போட்டியில் நெருக்கமாக இல்லையென்றும் அவர் கூறினார் .
ஸ்ரீ சைதன்யா பள்ளிகளில் கல்வி இயக்குனர் திருமதி .சீமா கூறுகையில் , நாசா என் .எஸ் .எஸ் விண்வெளி நிலைதங்கள் போட்டியில் இதுபோன்ற மிகப்பெரிய வெற்றிக்கு முக்கியமான காரணம் நடைமுறை அடிப்படையிலான கற்பித்தல் முறையே என்று கூறியுள்ளார். இந்த வெற்றியை சாத்தியமாகிய பரிசுவென்ற மாணவர்கள் அனைவர்க்கும் திருமதி .சீமா வாழ்த்துக்களை
தெரிவித்துள்ளார் .