ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு சென்னை சுற்றுவட்டாரங்களில் நடைபெற்று வருகிறது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள திருவல்லிக்கேணியில் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பு வாகனங்கள் சாலைகளில் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகவே இதனை செய்தியாளர்கள் புகைப்படம் எடுத்தனர்.
புகைப்படம் எடுத்த செய்தியாளர் மீது 2.0 படப்பிடிப்பு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பாக ஐஸ் அவுஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ‘2.0’ படக்குழுவிலிருந்து செய்தியாளரை தாக்கிய பப்பு என்பவரை போலிசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, இயக்குனர் சங்கர் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து, புகைப்படக் கலைஞரை தாக்கியதற்க்கு மன்னிப்புக் கேட்டார்.