ஆஸ்திரேலிய சமூக சேவகி ஒருவர், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடந்த வருடம் நவம்பர் மாதம் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். இந்த நிலையில் கடத்தப்பட்டு 5 மாதங்கள் கழிந்த நிலையில் நேற்று அவர் விடுதலை செய்யப்பட்டு, ஆப்கானிஸ்தானில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். இந்தத் தகவலை காபூல் நகர போலீஸ் செய்தித் தொடர்பாளர் பஷீர் முஜாகித் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் “அவர் பாதுகாப்பாக திரும்பி வருவதை அவர் குடும்பம் வரவேற்கிறது. அதே நேரம் ஊடகங்கள் இந்த நேரத்தில் அவரின் தனிப்பட்ட உரிமையை மதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.