பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற சிவப்பிரகாசம் என்பவர் கழுத்தை பறந்து வந்த பட்டத்தின் மாஞ்சாநூல் கழுத்தை அறுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிவப்ரகாசத்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற அவருடைய தந்தை சந்திரசேகர் மாஞ்சா நூல் அறுத்து படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் 4 பேர் மாஞ்சா நூல் பட்டத்திற்கு பலியாகி உள்ளனர். சென்னையிலும் மாஞ்சா நூல் பட்டம் விட ஏற்கனவே, தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதை கடுமையாக பின்பற்றவில்லை. மேலும், மாஞ்சா நூல் பட்ட விபத்திற்கு சிறிய வகை பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால், விபத்தை ஏற்படுத்தியவர்கள் சிறையில் இருந்து எளிதாக, உடனடியாக வெளியே வந்து விட்டனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பூரில் தந்தையுடன் பைக்கில் சென்று கொண்டு இருந்த 5 வயது சிறுவன் அஜய் கழுத்தை, மாஞ்சா நூல் பட்டம் பதம் பார்த்தது. இதில், சிறுவன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சிறுவன் உயிரிழந்தான். இதனையடுத்து மாஞ்சா நூல் தடவிய பட்டம் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது மீண்டும் மாஞ்சாநூல் தடவிய பட்டம் விடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது பறந்து வந்த பட்டத்தின் மாஞ்சாநூல் சிவப்பிரகாசம் என்பவரின் கழுத்தை அறுத்து உயிரை பறித்துள்ளது. சிவப்பிரகாசத்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற அவரது தந்தை சந்திர சேகர் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மாஞ்சா நூல் பட்டம் கழுத்தை அறுக்கும்போது அதிக ரத்த இழப்பு ஏற்படுகிறது. தொடர்ந்து மூச்சு திணறல் ஏற்படுகிறது. மூளைக்கு செல்லும் ரத்தம் துண்டிக்கப்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்கிறது. விபத்து ஏற்பட்ட 5 முதல் 10 நிமிடங்களில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் கூட காயம் அடைந்தவரை காப்பாற்றுவது கடினம். மாஞ்சா நூல் கழுத்தை அறுப்பது மட்டும் அல்ல கழுத்தை இறுக்கும்போது கூட மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மாஞ்சாநூல் பட்டம் தயாரிப்பவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை பாயுமா?