எம்பிரான் விமர்சனம்

நாயகி ராதிகா ப்ரீத்தி, தாத்தா மௌலி உடன் வசித்து வருகிறார். நாயகன் ரெஜி்த் ஒரு டாக்டர், ரெஜி்த்திற்கு தெரியாமல் அவரை பாலோவ் செய்து ஒருதலையாக காதலித்து வருகிறார். காதலை ரெஜித்திடம் சொல்லத்தெரியாமல் தவிக்கிறார்.

ஒருதலை காதல் தாத்தா மௌலிக்கு தெரிய வர, பேத்தி ராதிகா ப்ரீத்தியை அழைத்துக் கொண்டு ரெஜித்திடம் காதலை சொல்ல அழைத்து செல்கிறார்.

அந்த சமயத்தில் துரதிஷ்டவசமாக விபத்து ஏற்பட ராதிகா ப்ரீத்தி கோமா நிலைக்கு செல்கிறார், தாத்தா மௌலி விபத்தில் இறந்து விடுகிறார்.

ராதிகா ப்ரீத்தி கோமா நிலைமையில் இருந்து விடுபட்டாரா? ரெஜித் மேனனுக்கு, ராதிகா ப்ரீத்தியின் காதல் தெரிந்து இருவரும் சேர்ந்தார்களா? என்பதே எம்பிரான் படத்தின் மீதிக்கதை.

நாயகன் ரெஜித் மேனன் சிறப்பாக நடித்துள்ளார். அழகு பதுமையாக வந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நாயகி ராதிகா ப்ரீத்தி.

இயக்குனர் கிருஷ்ணா பாண்டி ஒருதலைக் காதலை மையமாக வைத்து படத்தை எடுத்துள்ளார். பிரசன்னாவின் இசையும் புகழேந்தியின் ஒளிப்பதிவும் கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறது படத்திற்கு.

மொத்தத்தில் ஒருதலைக்காதல் வயபட்டவர்களுக்கு பிடிக்கும் “எம்பிரான்”