நடிகர் சௌந்தரராஜா வித்தியாசமான நடிகர்களில் ஒருவர். கதைநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும்போதே வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து அசத்துவார்.
சுந்தரபாண்டியனில் தன் பயணத்தை தொடங்கிய சௌந்தர ராஜா சமீபத்திய தமிழ் ஹிட் படங்களின் மூலம் சிறப்பான வளர்ச்சியை எட்டி இருக்கிறார்.
கார்த்தி கதாநாயகனாக நடித்த கடைக்குட்டி சிங்கம், விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம், இரண்டு படங்களிலும் குணச்சித்திர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் ராஜபாண்டி எம்.எல்.ஏ. வாக கெத்தான வெத்து வில்லன் கதாபாத்திரத்தில் சௌந்தர ராஜாவின் நடிப்பைப்பார்த்து ரசிகர்களும் சினிமா நண்பர்களும் பெரிதும் பாராட்டுகின்றனர்.
சிங்கங்களை எதிர்த்து நின்று கெத்தாக சீறியதோடு மட்டுமின்றி ரசிகர்களை சிரிக்கவும் வைத்ததில் நிஜமாகவே மகிழ்ச்சி என்கிறார், சௌந்தரராஜா.