இளைஞர்களுக்கு ஆதரவாக களம் இறங்கிய ராகவா லாரான்ஸ், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். உணவு , பெட்சீட், மொபைல் டாய்லட் என பல வசதிகளை செய்து கொடுத்து உதவி புரிந்தார். போராட்டதில் ஈடுபட்ட லாரன்ஸ் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது உடல் நிலை தேறிவரும் லாரன்சை மாணவர்கள் நேரில் சென்று பார்த்தனர். ஜல்லிகட்டுக்காக தமிழக முதல்வர் அவசர சட்டத்தை கொண்டு வந்து , போராட்டத்திற்கு ஒரு தீர்வை ஏற்படுத்தினார், தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வரும் தருவாயில் போலீசாருக்கும் இளைஞர்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்றது. இதன் விளைவாக, கடைசி நாள் போராட்டத்தின் போது மீன் மார்கெட் முழுதும் உடைக்கபட்டது. தங்களுக்கு போராட்டத்தின் போது உதவி செய்த மீனவ மக்களுக்கு , சேதமடைந்த மீன் மார்க்கெட்டை திரும்ப கட்டித்தர, மீண்டும் 1௦ லட்சம் ரூபாய் , மாணவர்களிடையே கொடுத்து பிள்ளையார்சுழி போட்டுள்ளார் லாரன்ஸ். இது பற்றி லாரன்ஸ் பேசுகையில், போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றி கண்ட இளைஞர்களுக்கும், பாதுகாப்பு கொடுத்த போலீசாருக்கும், அவசர சட்டம் கொண்டுவர பாடுப்பட்ட மாண்புமிகு தமிழக முதல்வர் ஒ. பன்னீர் செல்வத்திற்கும், உறுதுணையாக இருந்த பிரதமர் அவர்களுக்கும், மாணவர்கள் சார்பாக நன்றியை தெரிவிப்பதாக கூறினார். 1௦ லட்ச ரூபாய் கொடுத்து , மீன் மார்கெட் கட்ட உதவி புரிந்த ராகவா லாரான்ஸ்க்கு, மீனவ குடும்பங்கள் மனதார நன்றியை தெரிவித்தனர்.