திருத்தணி முருகன் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா

தெய்வானையுடன் முருகபெருமானுக்கு நடந்த திருமணத்தை  பக்தர்கள் கண்டு களித்து  சாமி தரிசனம் செய்தனர் திருத்தணி ஏப், 19திருத்தணி முருகன் கோவில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 12 ஆம் தேதி   கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மூலவர் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. தினமும் காலை மாலை வேலைகளில் மயில்வாகனம் அன்ன வாகனம்  யானை வாகனம் என கோவில் பிரகாரத்தை  உற்சவர் முருகபெருமான் வள்ளி தெய்வானையுடன் வலம் வந்தார். பிரம்மோற்சவ விழாவின் எட்டாம் நாளான  இன்று  (19 -ந் தேதி  )மாலையப்ப சாமிக்கு தெய்வானையுடன்  திருக்கல்யாண விழா நடத்தப்பட்டது . முருகப்பெருமானின் திருமண வைபவத்தை திருவள்ளூர் அரக்கோணம் வேலூர்  ஆந்திர மாநிலம்  சித்தூர் புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த  திரளான பக்தர்கள் கண்டு களித்தனர்  . இதில் விழாவுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெயசங்கர், இணை ஆணையர் புகழேந்தி ஆகியோர் செயதிருந்தனர் .