என்ன தவம் செய்தேனோ விமர்சனம்

தள்ளு வண்டியில் ஐஸ் விற்கும் தொழிலாளிக்கும் (கஜினி முருகன்), அரசியல்வாதியின் மகளுக்கும் (விஷ்ணு பிரியா) காதல் உண்டாகிறது. அப்பாவான அரசியல்வாதிக்கு பயந்து ஊரை விட்டு ஓடி விடுகின்றனர் காதல் ஜோடிகள். தன் மகள் கீழ் ஜாதி பையனை காதலிப்பது தெரிந்ததும் இருவரையும் கொலை செய்ய  ஊர் ஊராக தேடி வருகிறார் அரசியல்வாதியும் அவருடைய அடியாட்களும். அவர்கள் வேறு மாநிலத்திற்கு சென்று திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு குழந்தையும் பிறக்கிறது. 

அவர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் அலைந்த அவரது அப்பா கொலை செய்தாரா? அல்லது மனம் திருந்தி அவர்களை ஏற்றுக் கொண்டாரா?  என்பதே என்ன தவம் செய்தேனோ படத்தின் மீதிக் கதை.

கதாநாயகன் கஜினியும், கதாநாயகி விஷ்ணு பிரியாவும் புதுமுகமாக இருந்தாலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பிரியா மேனன் இரண்டாவது நாயகியாக கஜினியை காதலிக்கும் அழகு பெண்ணாக வெகுளியாக நடித்துள்ளார். ஆர்.என்.ஆர். மனோகரன் அரசியல்வாதியாக கண்களில் வெறியோடு மிரட்டியிருக்கிறார். காமெடிக்காக சிங்கம்புலியும், மயில்சாமியும் பயன்படுத்த பட்டிருக்கிறார்கள்.

நடிகர்கள்: 

கஜினி முருகன், விஷ்ணு பிரியா, பிரியா மேனன், ஆர்.என்.ஆர்.மனோகரன், சிங்கம்புலி,  மயில்சாமி, டெல்லி கணேஷ், ஆர்த்தி, பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் மற்றும் பலர்.

தொழிநுட்ப கலைஞர்கள்: 

இயக்குனர் : முரபாசெலன்
இசை : தேவகுரு
நடனம் : ராதிகா
தயாரிப்பு : S செந்தில்குமார்
மக்கள் தொடர்பு : பெரு துளசி பழனிவேல்

மொத்தத்தில் என்ன தவம் செய்தேனோ “மீண்டும் ஒரு ஜாதிக்கான கொலை”

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்