செம விமர்சனம்

செம விமர்சனம்

ஹீரோ ஜிவி பிரகாஷ் திருச்சியில் காய்கறி மற்றும் கருவாடு ஆகியவற்றை வண்டியில்  விற்கும் தொழில் செய்து வருகிறார். நண்பர் யோகி பாபுவும் இவருடன் வேலை பார்த்து வருகிறார். குடுகுடுப்புக்காரன் ஜி.வி.பிரகாஷின் வீட்டை பார்த்து, ஒருநாள் இரவில் கெட்ட காலம் வரபோகுது என்று சொல்கிறான். இதனால் ஜி.வி.பிரகாஷின் அம்மா சுஜாதா சிவகுமார், ஜோதிடர் ஒருவரிடம் ஜாதகம் பார்க்கிறார்.
ஜோதிடர் ஜி.வி.பிரகாஷுக்கு மூன்று மாதத்திற்குள் திருமணம் செய்து வைக்க வேண்டும், இல்லை என்றால் 6 வருடங்கள் கழித்துதான் திருமணம் செய்ய முடியும் என்று சொல்கிறார். ஆகையால், ஜி.வி.பிரகாஷுக்கு அவசரமாக பெண் தேடுகிறார் அம்மா சுஜாதா சிவகுமார். பெண் பார்க்க போகும் இடத்தில் எல்லாம் ஜி.வி.பிரகாஷை  மறுக்கிறார்கள்.
உள்ளூரில் பெண் கிடைக்கவில்லை என்பதால் வெளியூரில் இருக்கும் மன்சூர் அலிகான், கோவை சரளாவின் பெண்ணான நாயகி அர்த்தனாவை பெண் பார்க்க செல்கிறார்கள். அர்த்தனா, ஜி.வி.பிரகாஷ் இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்து போக, நிச்சயம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்கள்.
இச்சமயத்தில், அதே ஊரில் வசிக்கும் எம்.எல்.ஏ.வின் மகன் அர்த்தனாவை ஒருதலையாக காதலித்து வருகிறார். மன்சூர் அலிகானிடம் உங்கள் கடனை அடைகிறேன், அர்த்தனாவை, திருமணம் செய்து வைக்கும் படி கேட்கிறார், மன்சூர் அலிகானும் சம்மதிக்கிறார்.
அர்த்தனா-ஜி.வி.பிரகாஷ் இன் நிச்சயத்தை நிறுத்தி விடுகிறார் மன்சூர் அலிகான். ஜி.வி.பிரகாஷின் அம்மா நிச்சயதார்த்தம் நின்றதால், தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். அதன்பின்னர் ஜிவி. பிரகாஷ் என்ன செய்தார்? மன்சூர் அலிகான், எம்.எல்.ஏ. மகனுக்கு அர்த்தனாவை திருமணம் செய்து வைத்தாரா? இல்லை அர்த்தனா-ஜி.வி.பிரகாஷ் இணைந்தார்களா? என்பதே செம படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள் : ஜீ.வி.பிரகாஷ்குமார், அர்த்தனாபினு, காயத்ரி, யோகி பாபு, ஜனா, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா சிவகுமார் மற்றும் பலர்
இயக்கம் – வள்ளிகாந்த்

ஒளிப்பதிவு – எம்.சி. விவேகானந்தன்

இசை – ஜிவி. பிரகாஷ்

வசனம் – பாண்டிராஜ்

எடிட்டிங் – பிரதீப். ஈ.ராகவ்

தயாரிப்பு – பாண்டிராஜ் மற்றும் லிங்கா பைரவி ரவிச்சந்திரன்

பி.ஆர்.ஓ. – சுரேஷ் சந்திரா

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்