மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி தொண்டர்களை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி படுகொலை செய்ததாகவும், அதற்கு கண்டனம் தெரிவித்து கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு ஆகியோர் விளக்கி பேசினர். இதில், நகர குழு உறுப்பினர் தங்கவேல், முருகன், சக்திவேல்முருகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகர செயலாளர் காளிதாஸ், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட குழு உறுப்பினர் தெய்வேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.