ராஜீவ் காந்தி ஜோதி ரத யாத்திரைக்கு கோவில்பட்டியில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறப்பான வரவேற்பு

ராஜீவ் காந்தி ஜோதி ரத யாத்திரைக்கு கோவில்பட்டியில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிறப்பான வரவேற்பு

கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தீவிர வாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அஹிம்சையை வலியுறுத்தியும் கடந்த 27 ஆண்டுகளாக ராஜீவ் காந்தி ஜோதி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி கர்நாடக தொழிலாளர் பிரிவு காங்கிரஸ் தலைவர் பிரகாஷ் தலைமையில், இம்மாதம் 15ம் தேதி ராஜீவ்காந்தி ரத யாத்திரை பெங்களூரில் இருந்து முன்னாள் முதல்வர் சித்தராமையா கொடியசைத்து துவக்கி வைக்க, அங்கிருந்து புறப்பட்டது. கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பின்னர் இம்மாதம் 21ம் தேதி ராஜிவ்காந்தி நினைவு தினத்தன்று ஸ்ரீபெரும்புதூர் சென்றடைகிறது.

ஆதன் ஒரு பகுதியாக கோவில்பட்டிக்கு வந்த இந்த ஜோதி ரத யாத்திரைக்கு பயணியர் விடுதி முன்பு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உமாசங்கர், மகேஷ்குமார், பிரேம்குமார், சவரிஆனந்தன், மாவட்ட துணை தலைவர் திருப்பதிராஜா, நகர தலைவர் சண்முகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், துணை தலைவர் பிச்சைக்கனி, கயத்தாறு ஒன்றிய காங்கிரஸ் தலைவர் செல்லத்துரை, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் மதி, மாவட்ட வழக்கறிஞரணி பிரிவு தலைவர் அய்யலுசாமி, கடம்பூர் நகர காங்கிரஸ் தலைவர் ஜெகதீசன், எஸ்.சி., துறை பிரிவு மாவட்ட தலைவர் மாரிமுத்து உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்