விஜய் ஆண்டனி அமெரிக்காவில் மிகப்பெரிய டாக்டர். பரத் ஆஸ்ப்பிட்டல் ஒன்றை இவரே சொந்தமாக நிர்வகித்து வருகிறார். விஜய் ஆண்டனிக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. பாம்பு ஒன்று காளை மாட்டை துரத்த, அந்த காளை மாடு ஒரு 2 வயது சிறுவனை முட்ட வருகிறது, அப்பொழுது அந்த குழந்தையின் தாய் நடுவில் வந்து மாடு முட்டி இறந்து விடுகிறார்.
இக்கனவு எதனால் வருகிறது என்று குழப்பத்தில் இருக்கிறார். ஒரு கட்டத்தில் தன்னுடன் இருக்கும் பெற்றோர் தன்னை பெற்றவர்கள் இல்லை என்பது விஜய் ஆண்டனிக்கு தெரிய வருகிறது.
ஆகையால் தன் உண்மையான தாய் தந்தையை பற்றி தெரிந்துக் கொள்ள தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு தேடி வருகிறார். அங்கு அறிமுகமாகும் யோகிபாபு அவருக்கு உதவி செய்கிறார். அங்கு நடந்தது என்ன யாரையெல்லாம் சந்தித்தார்? தன் தாய் தந்தையை கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
4 கேரக்டர்களில் வருகிறார் விஜய் ஆண்டனி, சுனைனா, அமிர்தா மற்றும் ஷில்பா, நாட்டு மருத்துவராக அஞ்சலி, என நான்கு கதாநாயகிகள். யோகி பாபுவின் காமெடி அனைவரையும் சிரிக்க வைக்கிறது. மதுசூதனன், வேல ராமமூர்த்தி, நாசர், ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
நடிகர்கள் : விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத், நாசர், ஜெயப்பிரகாஷ், ஆர்.கே.சுரேஷ், வேல ராமமூர்த்தி மற்றும் பலர்.
இயக்கம் : கிருத்திகா உதயநிதி,
இசை : விஜய் ஆண்டனி,
ஒளிப்பதிவு: ராஜீவ் ரவி,
தயாரிப்பு: பாத்திமா விஜய் ஆண்டனி
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்