என் ஒவ்வொரு படத்திலும் ஒரு அறிமுகம் இருக்கும் – தங்கமகன் தனுஷ்

maxresdefault

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள ‘தங்க மகன்’ டிசம்பர் 18ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இது பற்றி தனுஷிடம் பேசியபோது…

‘தங்க மகன்’ படத்துக்கு முதல்ல ‘தமிழ் மகன்’ன்னுதான் பேர் வச்சோம். என்னோட கேரக்டரின் பெயர் தமிழ்ங்கிறதால அது சரியா இருக்கும்னு நினைச்சோம். ஆனா, தயாரிப்பாளர்தான் ‘தங்கமகன்’ன்னு இருந்தா நல்லா இருக்கும்ன்னார். அதுவும் சரிதான்னு அப்படியே வச்சோம்.

இந்தப் படம் முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெயினரா இருக்கும். என்னோட ரசிகர்களுக்கு மட்டுமில்லாம, இன்னைக்கு இருக்கிற இளைஞர்கள், ஃபேமிலி, குழந்தைகள்ன்னு குடும்பத்தோட பார்க்கக் கூடிய படமா தங்கமகன் இருக்கும்..!” என்ற தனுஷிடம் பல புதியவர்களை அவர் அறிமுகப்படுத்துவதைப் பற்றிக் கேட்டபோது,

“காதல் கொண்டேன்’ படத்தோட கதையை என் அண்ணன் செல்வராகவன் பல முன்னணி நடிகர்கள்கிட்ட சொன்னப்ப யாருமே அதில நடிக்க முன்வரலை. அப்ப ரொம்ப வருத்தமா “எல்லாருக்குமே முதல் வாய்ப்பு ரொமப் கஷ்டம். பின்னாடி ஒரு காலத்தில நாம பெரிய ஆளாகிட்டோம்னா, புதுசா வர்ரவங்களுக்கு நாம உதவணும்”ன்னு சொன்னார். அந்த வார்த்தைகளை நான் தயாரிக்கிற படங்கள்ள இருக்கிற மாதிரி பாத்துக்கறேன்.

என் வுண்டர்பார் பிலிம்ஸ்ல ஒவ்வொரு படத்துலயும் இப்படி அறிமுகங்கள் இருக்கும். இப்ப தங்கமகன் படத்துல கூட ஒளிப்பதிவாளர் ஒரு புதுமுகம்தான்..!” என்ற தனுஷ் இப்போது தான் நடித்து வரும் படங்கள் பற்றிய முன்னோட்டம் சொன்னார்.

பிரபு சாலமன் டைரக்ஷன்ல நான் நடிச்ச படத்தோட ஷூட்டிங் முடிஞ்சிடுச்சு. ஆனாலும், அதுல கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைய இருக்கிறதால அந்த வேலைகளுக்காக ஆறு மாசம் தேவைப்படுது. அதனால, அந்தப்படம் சம்மர் வெகேஷனுக்கு வெளியாகும்.

அதுக்கு அடுத்து துரை.செந்தில்குமார் டைரக்ஷன்ல த்ரிஷா, ஷாமிலி, எஸ்.ஏ.சந்திரசேகரன் சாரோட நான் நடிக்கிறேன்.

வெற்றிமாறன் டைரக்ஷன்ல ‘வட சென்னை’ அடுத்த வருஷம் ஏப்ரல்ல தொடங்கும். அப்புறம் ஒரு இந்திப்படம். ‘விஐபி 2, மாரி 2’ படங்களும் வரிசையில இருக்கு. மத்ததெல்லாம் பிறகுதான்.

அஸ்வினி ஐயர் டைரக்ஷன்ல அமலாபால், ரேவதி நடிக்கிற ஒரு இந்திப் பட ரீமேக்கை தயாரிக்கிறேன். தொடர்ந்து விஜய் சேதுபதி நடிக்கிற இன்னொரு படத்தைத் தயாரிக்கிறேன். என் தயாரிப்புல பேர் வாங்கிப் பெருமைளைச் சேத்துக்கிட்டிருக்க வெற்றிமாறனோட ‘விசாரணை’ ஜனவரி கடைசியில வெளியாக இருக்கு..!”

வாழ்த்துகள் தனுஷ்..!