RIC கூட்டமைப்பில் உள்ள இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் உலக அளவிலான பிரச்னைகள் குறித்து அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தக் கூட்டங்களில் பயங்கரவாதம், பிரிவினை வாதம், உலகளாவிய மற்ற பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கூட்டமானது இன்று புதுடெல்லியில் நடைபெறுகிறது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ரஷ்யாவின் செர்ஜி லவ்ரவ், சீனாவின் வாங் யீ ஆகியோர் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய-சீன நாடுகளுக்கு இடையேயான டோக்லாம் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.