நடிகர் விஷால் இன்று காலை 7:30 மணி அளவில் அவர் வீட்டிற்கு அருகே உள்ள மாகாளியம்மன் கோவிலுக்கு வீட்டிலிருந்து நடந்தே சென்று அம்பாளை தரிசித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி T- நகரில் அமைந்துள்ள முன்னால் முதல்வர் கர்மவீரர் காமராஜர் அவர்களுடைய இல்லத்திற்கு சென்று அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் அங்கிருந்து கிளம்பி ராமாவரத்தில் அமைந்துள்ள முன்னால் முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய சிலைக்கு சுமார் 8:30 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதை தொடர்ந்து அடையாறில் அமைந்துள்ள செவாலியர் சிவாஜியின் மணிமண்டபத்திலுள்ள நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுடைய சிலைக்கு 10.30 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து சென்னை மெரினாவில் அமைந்துள்ள முன்னால் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் சமாதிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் முன்னால் முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் சமாதிக்கும் , முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் சமாதிக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து மாலை 4.35 மணியளவில் ஆர்.கே நகரிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் வரிசையில் நின்று விஷால் மனுத்தாக்கல் செய்தார்.சட்ட ஆலோசகர் சார்லஸ், நடிகர் விஜய் பாபு, ரமணா, R.k.சுரேஷ், உதயா ஆகியோர் உடன் இருந்தனர்.