11ஆம் வகுப்பு மாணவன் பெற்றோர் திட்டியதால் கிணற்றில் குதித்து தற்கொலை

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பகுதியை சேர்ந்த பாபு-அஞ்சலி தம்பதியினரின் மூத்த மகன் சந்ரு பாபு குடியாத்தம் பகுதியில் பணி புரிந்து வருவதால் தனது மகள் மற்றும் மனைவியுடன் குடியாத்தத்தில் வசித்து வரும் நிலையில் சந்ரு கொடையாஞ்சி யில் தனது பாட்டி வீட்டில் தங்கி அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் சந்ரு படிப்பில் சரிவர நாட்டம் செலுத்தாமல் அலட்சியமாக இருப்பதாக பெற்றோர் நேற்று கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்த சந்ரு நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்று இரவு முழுவதும் வீடு திரும்பாத நிலையில் இன்று காலை கொடையாஞ்சி பாலாற்றில் உள்ள கிணற்றில் சடலமாக மிதப்பதை கண்ட அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.