கோவில்பட்டி அருகே புதிய வழித்தடத்தில் அரசு பஸ் இயக்கம் – அமைச்சர் தொடங்கி வைத்தார்

கோவில்பட்டி அருகேயுள்ள அகிலாண்டபுரம் இந்திரா காலனியில் இருந்து ஏரளமான தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கோவில்பட்டி ,கயத்தாருக்கு தினமும் சென்று வருகின்றனர். இவர்களுக்கு போதிய பஸ் வசதியில்லமால் அவதிப்பட்டுவந்தனர். தங்களுக்கு போதிய பஸ் வசதி செய்து தரக்கோரி தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீவிடம் கோரிக்கை வைத்தனர்.இதனை தொடர்ந்து அகிலாண்டபுரம் வரை இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் இந்திரா காலனி வரை இயக்கவும், அங்கிருந்து கயத்தார் செல்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் தொடக்க விழா இந்திரா காலனியில் இன்று காலைநடைபெற்றது. அமைச்சர் கடம்பூர்..செ.ராஜீ கலந்து கொண்டு பஸ் இயக்கத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு போக்கு வரத்து கழக தூத்துக்குடி கோட்ட மேலாளர் சமுத்திரம், கோவில்பட்டி கிளை மேலாளர் ரமேஷன், அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், வேலுமணி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், ராமமூர்த்தி, அண்ணா தொழிற்சங்க தூத்துக்குடி மண்டல மேலாளர் பொன்ராஜ், கிளை செயலாளர் பொன்.வெங்கடசலம், ஹரிராம் மற்றும் நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டனர்