தமிழக ஹாக்கி அணி சார்பில் தொடர்ந்து 3 நாட்கள், 24 மாவட்டங்களுக்கு இடையில் நடைபெறும் ஹாக்கி போட்டி தொடங்கியது

தமிழக ஹாக்கி அணி சார்பில் தொடர்ந்து 3 நாட்கள், 24 மாவட்டங்களுக்கு இடையில் நடைபெறும் ஹாக்கி போட்டி சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் தொடங்கியது.
 
 முதல் நாள் போட்டியில் தொடக்க வீரர்களாக கலந்துகொண்ட திருச்சி மற்றும் தூத்துக்குடி  மாவட்டங்களை  சேர்ந்த வீராங்கனைகளுக்கு  ஸ்டார் டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மகேஸ்வரன், இன்போரியஸ் சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பழகன், எஸ்.டி.ஏ.டி  மண்டல முதுநிலை மேலாளர் புண்ணிய மூர்த்தி, ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் மனோகர், பொதுச்செயலாளர் ரேணுகா லக்ஷ்மி, பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். 
 
7,8,9 ஆகிய தேதிகளில்  நடைபெறும் இந்த போட்டியில் மொத்தமாக 500 வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இறுதியில் 9ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் வீராங்கனைகளிலிருந்து 40 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு 21 நாட்கள் சென்னையில் தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்.  அதிலிருந்து 18 வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கேரள மாநிலம் கொல்லத்தில்  நடைபெற உள்ள  தேசிய அளவிலான பத்தாவது முதுநிலை பெண்கள் ஹாக்கி போட்டியில் தமிழக அணி யின் சார்பில் கலந்து கொள்ள அனுப்பப்பட உள்ளனர்.