கணிணி திறன்களை வளர்க்க அரசு பள்ளிகளுக்கு 437 கோடியே 78 லட்சம் ஒதுக்கீடு – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ

கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூரில் இந்து நாடார்கள் மேல்நிலைபள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தலைமை வகித்தார். தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்டு 57 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணிணிகள் வழங்கி பேசுகையில் இந்தியாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு திட்டங்களை தந்தவர்.

நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என்று கருத்தில் உறுதியாக இருந்தார்.அவரது வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசும் தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை, விலக்கு பெற தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஒரு ஆண்டுவது பெற்று விட அவசர சட்டமும் இயற்றியது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பினால் நீட் தேர்வு நடைமுறைப்படுத்தவேண்டிய சூழ்நிலை இருப்பினும் நீட் தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை தயார்படுபத்தும் பள்ளி கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

வளர்ந்து வரும் தொழில் நுட்ப சவால்களுக்கு அரசு பள்ளி மாணவர் ஈடுகொடுக்கும் வகையில், அவர்களின் கணிணிதிறனை வளர்க்கும் வகையில் அரசு பள்ளிகளுக்கு கணிணி வாங்குவதற்காக 437 கோடியே 78 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்க ரூ 60 கோடி ஓதுக்கிடு செய்யப்பட்டுள்ளதாகவும், வரும் ஆண்டுகளில அரசு அளிக்கு பயிற்சியினால் தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் சிறப்பிடம் பெறுவார்கள் என்றார்.