3-வது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக விராட் கோலி வெளியேறினார்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய வீரர் ஜடேஜா 39-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை ஹேண்ட்ஸ்காம்ப் டீப் மிட்விக்கெட் திசையில் அடித்தார். பந்து பவுண்டரி எல்லையை நோக்கி வேகமாக ஓடியது. பந்து பவுண்டரி எல்லையைத் தொடாமல் தடுக்கும் நோக்கத்துடன் பந்தை விழுந்து தடுத்தார். அப்போது அவரது வலது தோள்பட்டை தரையில் பயங்கரமாக மோதியது.

இதில் அவரது வலது தோள்பட்டையில் வலி ஏற்பட்டது. இதன் காரணமாக ஆடுகளத்தை விட்டு விராட் கோலி வெளியேறினார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் ரகானே தற்போது இந்திய அணியை வழி நடத்தினார். தேனீர் இடைவேளை வரை பீல்டிங் செய்ய வராத விராட் கோலி, தேனீர் இடைவேளை முடிந்த பின்னரும் பீல்டிங் செய்ய வரவில்லை. இதனால் அவரது காயத்தின் பாதிப்பு அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.