அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஃபோண்டோனா நகரில் உள்ள ஆட்டோ கிளப் ஸ்பீட்வே உணவகத்தைச் சேர்ந்த 12 சமையல் கலைஞர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து இந்த சாதனையை படைத்தனர். 2 கிலோ மீட்டர் நீளமும், 7,808 கிலோ எடையும் கொண்ட இந்த பீட்சாவைத் தயாரிக்க 8 மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் செலவழிக்கப்பட்டது.
மனிதநேயம் மற்றும் நட்பைக் கொண்டாடும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த பீட்சா தயாரிப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு இலவசமாக பரிமாறப்பட்டது. மீதமுள்ள பீட்சா துண்டுகள் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், உணவு வங்கிகளுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்த பீட்சா இடம்பெற இருக்கிறது.