2 400 பேர் பலி டெங்குவுக்கு -ஸ்டாலின்

சென்னையில் உள்ள கொளத்தூர் தொகுதியில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
 டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை கேட்டறிந்தேன். டெங்கு காய்ச்சலுக்கு, 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு நன்றி. தமிழகத்தில் இதுவரை, 400 பேர் இறந்து இருக்கலாம் என எங்களுக்கு தகவல் வந்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு, 26 பேர் தான் இறந்துள்ளதாக கூறி வருகிறது. அரசு தவறான தகவல்களை பரப்பி வருகிறது. குட்கா ஊழலை தொடர்ந்து தற்போது, ஒயர்லெஸ் ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.