விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மாற்றம்

 

 

5திமுக சார்பில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.
திமுக சார்பில் விருத்தாச்சலம் தொகுதியில் தங்க ஆனந்தன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், விருத்தாசலம் தொகுதியில் தங்க ஆனந்தனுக்குப் பதிலாக கோவிந்தசாமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வேட்பாளர் மாற்றப்பட்டதைக் கண்டித்து விருத்தாசலத்தில் திமுகவினர் சிலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.