விடுதலை சிறுத்தைகள் முதல் பட்டியல் வெளியீடு : திருமாவளவன் போட்டியா?

16NOV2012NIE24_27-11-2012_19_0_1தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணியில் இணைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்கள் முதல் பட்டியலை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டார். எனினும், அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆர்.கே.நகர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படவில்லை.தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணியில் இணைந்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன.இதில் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று வெளியிட்டார்.புவனகிரி- சிந்தனை செல்வன்,  குன்னம்- ஆனூர் ஷாநவாஸ், மயிலம்- எஸ்.எஸ்.பாலாஜி, சோளிங்கநல்லூர்- இரா.பன்னீர்தாஸ், செய்யூர் – எழில் கரோலின், சேலம் தெற்கு- கோ.ஜெயசந்திரன், ஊத்தங்கரை – சி.கிருஷ்ணன் என்ற கனியமுதன், துறையூர் – சுஜாதேவி என்ற ஆதிமொழி, வந்தவாசி – மேத்தா ரமேஷ், ராசிபுரம்- க.அர்ஜூன், மேலூர் – அப்துல் ரகுமான்.மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நாளை காலை வெளியிடப்படும் என கூறி திருமாவளவன், முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் யார் வேட்பாளர் என்பது நாளை காலை தெரியும் என்றார்.