எனர்ஜிடிக் ஸ்டார் ராம் பொதினேனி, இயக்குநராக அறிமுகமாகும் தனது 23வது திரைப்படமான #RAPO23-க்கு இசையமைப்பாளராக சாம் சி எஸ் இணைந்துள்ளார். சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில், கதையின் பரபரப்பையும் உணர்வுகளையும் இசையின் மூலம் வலுப்படுத்தும் முக்கிய பொறுப்பை அவர் ஏற்றுள்ளார்.
திரில்லர், ஆக்ஷன், ஹாரர் உள்ளிட்ட பல ஜானர்களில் தனித்துவமான பின்னணி இசைக்காக பாராட்டப்பட்ட சாம் சி எஸ், சமீபத்தில் வெளியான ‘இம்மார்டல்’ திரைப்படத்தின் ‘லவ் யூ லவ் யூ காட்டேரி’ பாடல் மூலம் தனது மெலடி திறமையையும் மீண்டும் நிரூபித்துள்ளார்.
தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக பணியாற்றி வரும் சாம் சி எஸ், ‘கராத்தே பாபு’, ‘சர்தார் 2’, ‘டிமான்டி காலனி 3’ உள்ளிட்ட முக்கிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.
ராம் பொதினேனியின் இயக்குநர் அறிமுகமும், சாம் சி எஸின் இசையும் இணையும் இந்த கூட்டணி, #RAPO23 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

