முதல் படம் முதல் சமீபத்திய மாம் படம் வரை தன் நடிகர்களுக்கு மிகச்சிறந்த விரும்தோம்பல் அளிக்கும் போனி கபூர்

தன் முதல் படமான ஹம் பாஞ்ச் முதல் சமீபத்திய மாம் படம் வரை, தன் நடிகர்களுக்கு மிகச்சிறந்த விரும்தோம்பல் அளிப்பதை விரும்பும் போனி கபூர்

மிகவும் எளிமையாக, தாழ்மையாக, கீழ்ப்படிதலுமாக இருக்கும் தயாரிப்பாளர் போனி கபூர் நட்புக்கு மட்டுமல்ல, தனது நண்பர்கள், குழுவினர் மற்றும் சக ஊழியர்களுக்கு அளிக்கும் விருந்தோம்பலுக்காகவும் புகழ் பெற்றவர். இந்த பழம்பெரும் தயாரிப்பாளர் 1979/80ல் தயாரித்த அவரது முதல் திரைப்படமான “ஹம் பாஞ்ச்” முதலே தனது குழுவினரை நன்றாக நடத்துவதை உறுதிப்படுத்துகிறார்.

போனி கபூர் தனது முதல் படமான ஹம் பாஞ்ச் படத்தின் படப்பிடிப்பின் போது, தனது நடிகர்களுக்கு உணவு பரிமாறியிருக்கிறார். அதற்கும் மேலாக, படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அருகில் ஹோட்டல் இல்லாத காரணத்தால், அங்கிருந்து அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு 100 மைல்கள் தூரம் செல்ல வேண்டும் என்பதாலும்  கழிவறைகளுடன் கூடிய காட்டேஜ்களை கட்டினார். சினிமா பார்க்க தியேட்டர், உள்விளையாட்டுகளுக்கு என தனியாக இரண்டு காட்டேஜ்களை அமைத்தார். பேட்மின்டன் கோர்ட் மற்றும் நடிகர், நடிகைகள் பொழுதுபோக்குக்கு 40 வேறுபட்ட திரைப்படங்களையும் தேர்வு செய்து வைத்திருந்தார்.

நடிகர்களுக்கு போனி கபூர் உணவு பரிமாறும் இந்த படத்தை பாருங்கள். சஞ்சீவ் குமார், மிதுன் சக்ரபோர்த்தி, ராஜ் பாப்பர், குல்ஸன் குரோவர், ரஞ்சித் சூட், ஏ.கே.ஹங்கல் மற்றும் உதய் சந்திரா ஆகியோர் சேர்ந்து சாப்பிடுவதைக் காணலாம்.

ஜார்ஜியாவின் பனி மூடிய மலைகளில் படம் பிடிக்கப்பட்ட அவரது கடைசி படமான “மாம்” படத்தின் படப்பிடிப்பின் போதும் அதே விஷயங்களை செய்தார். இந்த படம் போனி கபூருக்கு மிகவும் ஸ்பெஷல். ஏனெனில் இது ஸ்ரீதேவியின் 300வது படம்.