புதுப்பிக்கப்பட்ட தம்பி விலாஸ் உணவகத்தின் தி-நகர் கிளை திறப்பு

19-வது நூற்றாண்டை நினைவுப்படுத்தும் கிராமபோனும், வண்ணமையமான உள்கட்டமைப்பும் கொண்ட சென்னை தி-நகர் தம்பி விலாஸ் உணவகம், தொடர்ந்து ருசியான உணவுகளை பரிமாறி வருகிறது.

தம்பி விலாஸின் பயணம், 1959-ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தொடங்கியது. திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கையைச் சேர்ந்த ஶ்ரீ வீரப்ப செட்டியார், சிங்கப்பூரில் முதன் முதலில் பேக்கரியைத் தொடங்கினார். அங்கு விற்கப்பட்ட ஹல்வா, மிட்டாய், கேக்குகள் என அனைத்தும் இந்திய மக்கள் மட்டுமின்றி மலேசியா, சீன மக்களிடமும் மிகவும் பிரபலமானது. அதனைத் தொடர்ந்து, 1964-ஆம் ஆண்டு, மறைந்த ஶ்ரீ வீரப்பா செட்டியாரும், அவரது மகன் ஶ்ரீ மருதப்ப செட்டியாரும் இணைந்து பேக்கரியை புதுப்பித்தனர். பாரம்பரிய தென்னிந்திய உணவகமாக புதுப்பிக்கப்பட்ட அந்த உணவகத்தில்தான், தம்பி விலாசின் ருசி பிறந்தது. ஶ்ரீ வீரப்ப செட்டியாரின் மருமகள், ஶ்ரீமதி ருக்மணி அம்மாளின் வழிநடத்துதலுக்கேற்ப, தம்பி விலாசின் உணவுகள் தயாரிக்கப்பட்டன. மக்களின் பேராதரவுடனும், உதவியாலும் பேக்கரி உணவகமாக புதுப்பிக்கப்பட்டது.

சிங்கப்பூரில் தொடங்கப்பட்ட முதல் கிளையில் இரண்டு மேஜைகள், எட்டு நாற்கலிகளுடன் ஆரம்பமான தம்பி விலாசின் பயணத்தில் இப்போது சென்னையில் மட்டுமே நான்கு கிளைகள் திறக்கப்பட்டுவிட்டன. (ஓ.எம்.ஆர், தி-நகர், கிண்டி, அண்ணா நகர்). குறிப்பாக, கிண்டி உணவகத்தில் மட்டும் முந்நூறு பேர் அமரும்படியும், மற்ற உணவகங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அமரும்படியும் கட்டப்பட்டுள்ளன.

தம்பி விலாசின் தலைமை நிர்வாகி திரு. அருண் பிரஷாந்த் பக்தவத்சலம் அவர்களின் வழிநடத்துதலில் தம்பி விலாசின் பயணம் வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறது. 2013-ஆம் ஆண்டு உணவுத் துறையில் பணியாற்றத் தொடங்கிய அவர், அதற்கு முன் லண்டன் பார்க்ளேஸில் இரண்டு ஆண்டுகள் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். சர்வதேச தொழில் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்கும் அவர் ஒரு உணவு பிரியர், பயண விரும்பி மற்றும் ப்ளாகர். உணவுத் துறையில் நுழைந்தபோது, சென்னை டோவோ ரெஸ்டாரண்டை நிர்வகித்து வந்தவர், 2016-ஆம் ஆண்டு முதல் தம்பி விலாஸ் நிர்வாகப் பொறுப்பை கையிலெடுத்தார்.

தேன் மிட்டாய், ஹல்வா, பர்ஃபி, பான் என தித்திக்கும் ‘நம்ம ஊர்’ மிட்டாய்கள் முதல் பாரம்பரிய தென் இந்திய உணவுகள் வரை சுவை மாறாது வழங்குவதே தம்பி விலாசின் முதற் நோக்கம். மக்கள் விரும்பும் சுவையான பால் இனிப்புகள் தம்பி விலாசில் பரிமாறப்படுகின்றன. பாரம்பரிய தென்னிந்திய உணவுகளுடன் சிறப்பான இனிப்பு வகைகளையும் சேர்த்து பரிமாறுவதில் தம்பி விலாஸ் மகிழ்ச்சி கொள்கிறது.

உணவு தயாரிப்பதற்கு தேவையான இறைச்சிகளை மிகுந்த கவனிப்புடன் தரமானதாகவும் சுத்தமானதாகவும் வாங்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளுக்கும் தேவையான பொருட்கள் அந்த நாளில்தான் வாங்கப்படுகிறது. குளிர்சாதனப் பெட்டியில் பதப்படுத்தி பயன்படுத்தும் பழக்கத்தை உணவகம் தொடங்கியது முதலே தம்பி விலாஸ் முற்றிலுமாக தவிர்த்து வருகிறது . சுத்தமான, தூய்மையான பொருட்களை பயன்படுத்துவதையே காலங்காலமாக பின்பற்றி வருகிறது.

தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் விவசாயிகளிடம் நேரடி தொடர்பில் இருக்கும் தம்பி விலாஸ், உணவகத்துக்கு தேவையான பொருட்களை விவாசாயிகளிடம் இருந்தே பெற்றுக்கொள்கிறது. பாதுகாப்பானதாகவும், சுவையானதாகவும், தரமான விலையிலும் பொருட்களை பெற்றுக்கொள்கிறது.

காலை உணவுக்கு ஸ்பெஷல் பிரியாணி பரிமாறும் சில உணவகங்களில் தம்பி விலாசும் ஒன்று. காலை 6 மணிக்கு தொடங்கும் பிரியாணி விற்பனை, நாள் முழுவதும் கிடைக்க கூடியதாக உள்ளது.

தம்பி விலாசின் தனிச்சிறப்பு:

பொதுவாக ஒரு பிராண்டு பிரபலமடைந்துவிட்டால், அந்த பிராண்டின் விலை உயர்த்தப்படும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது வழக்கம். இதனால், விலை உயர்த்தப்பட்டபோதும் பிராண்டு விற்பனை சிறப்பாக உள்ளதா என்பதை கண்கானிக்க முடியும். ஆனால், தரமான, ருசியான உணவுகளை வழங்கி வரும் தம்பி விலாஸ், ஒவ்வொரு புதிய கிளையை திறக்கும்போதும், அதே நியாயமான விலையில் விற்பனை செய்து வருகிறது. இதுவே தம்பி விலாசின் தனிச்சிறப்பு.

பிறரை மகிழ்ச்சிப்படுத்தி மகிழ்வதே மனித இயல்பு என்பதை நம்பும் தம்பி விலாஸ் குழுமம், அதை ‘பரிமாறுதல்’ மூலம் நிகழ்த்திக்காட்ட உழைத்து வருகிறது. மகிழ்வோடும், சிறப்போடும் பரிமாறப்படும் உணவுகளை வாடிக்கையாளர் திருப்தியாக சுவைத்துச் செல்ல வேண்டும் என்பதில் தம்பி விலாஸ் மிகுந்த கவனம் செலுத்துகிறது.