பிரான்ஸ் நாட்டில் உலகின் முதல் செயற்கை இதயம்

heartபிரான்ஸ் நாட்டில் உலகின் முதல் செயற்கை இதயம்

கடந்த 2013-ஆம் ஆண்டின் இறுதியில் பிரான்ஸ் நாட்டில் உலகின் முதல் செயற்கை இதயம் தயாரிக்கப்பட்டு 75 வயது நபருக்கு அது பொருத்தப்பட்டது.
ரூ.1.06 கோடி முதல்…அந்த இதயம் ஐந்து ஆண்டுகள் இயங்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டது. இதை இயக்கக்கூடிய லித்தியம்-அயன் பேட்டரி நோயாளி உடலின் வெளிப்புறமாக பொருத்தப்படும். உயிரி பொருள்களுடன் பசுவின் திசுக்களைக் கொண்டு இந்த செயற்கை இதயம் உருவாக்கப்பட்டது. இந்த செயற்கை இதயத்தின் விலை ரூ. 1.06 கோடி முதல் 1.37 கோடியாகும்.76 வயது முதியவருக்கு முதல் செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. செயற்கை இதயம் பொருத்தப்பட்ட அந்த முதியவர், 75 நாள்கள் மட்டுமே உயிரோடு இருந்தார். எனினும் செயற்கை இதயம் பொருத்துவது தொடர்பான ஆராய்ச்சிகளும், மருத்துவமனை பரிசோதனைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைவதன் மூலம் பல்வேறு நன்மைகளை மனிதகுலம் பெற்று வருகிறது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. எனினும் மனித உடல் உறுப்புகளுக்கு மாற்று உடல் உறுப்புகள் கண்டறியப்பட்டு, அவற்றைப் பொருத்தி, சாதாரண வாழ்க்கையை அந்த நபர் வாழ முடியுமா என்பது கேள்விக்குறியே. அவ்வாறு செயற்கை மாற்று உடல் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை ஏழை மக்கள் நிறைந்த இந்தியாவுக்கு எட்டாக்கனியே.

மேலை நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு காத்திருப்பது இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது.
விதியை மதியால் வெல்வது போல், செயற்கையை, உடல் உறுப்பு தானம் மூலம் வெல்ல முடியும் என்பதே உண்மை.பைபாஸ் அறுவை சிகிச்சையின் போது மேற்கொள்ள வேண்டியது என்ன?பை-பாஸ் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள், இதய நோய் மீண்டும் தங்களைத் தாக்கும் அபாயத்தைத் தடுக்கவும், மீண்டும் தங்களின் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பவும் தங்களது அன்றாட நடைமுறையில் சில மாற்றங்களைச் செய்து கொள்வது மிகவும் அவசியம்.
வீட்டில் முதல் வாரம்: பை-பாஸ் அறுவைச் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு, முதல் வாரத்தில் உங்களது அன்றாட வேலைகளை பழையபடி தொடர்வது முக்கியம். சில நேரங்களில் ஒரு சிறு வேலைகூட, உங்களை களைப்படையச் செய்யும். மூச்சு விடுவதும் சிரமமாக இருக்கும். ஆனால் இதற்காக கவலைப்படத் தேவையில்லை. இது சாதாரண விஷயம்தான்.நீங்கள் களைப்பாக இருப்பதாக உணர்ந்தால், மீண்டும் உங்கள் தினசரி வேலைகளைத் தொடங்கும் முன்பு சிறிது நேரம் ஓய்வு எடுக்கவும். 4 முதல் 8 வாரத்தில் உங்களது இயல்பான நிலை மீண்டும் ஏற்படும்.

ஓய்வுக்கும் திட்டமிடுங்கள்: உங்களுடைய தினசரி வேலைகளுக்கு இடையே சற்று ஓய்வு எடுப்பது முக்கியம். அன்றாட வேலைகளும் உடற்பயிற்சிகளும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கு முக்கியமானதாக இருந்தாலும், சரியான வேலைக்கும் அதிகப்படியான வேலைக்கும் இடையே ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது.
உங்கள் தினசரி வேலைகளைத் திட்டமிடுவதுபோல் அவ்வப்போது ஓய்வெடுக்கவும் திட்டமிடுதல் முக்கியம். இரவில் குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது அவசியம் என்பதை உறுதி செய்து கொள்ளவும். முதல் சில வாரங்களில் தினமும் பகலில் ஒரு குட்டித் தூக்கம் தூங்கலாம்.
உடற்பயிற்சி-நடைப் பயிற்சி: நீங்கள் மருத்துவமனையில் தங்கி இருந்த காலத்தில் நடைப்பயிற்சி செய்யத் தொடங்கி இருப்பீர்கள். அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடற்பயிற்சி செய்வது உங்களுடைய உடல் பலத்தை மேம்படச் செய்ய உதவும். உங்கள் இதயத்தின் பலத்தை அதிகரிக்கச் செய்வதுடன் எதிர்காலத்தில் இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவும்.நடைப் பயிற்சி செய்வதற்கு சமதள இடத்தைத் தேர்வு செய்து கொள்ளவும். தையல்களைப் பிரித்த பிறகு ஒரு பூங்காவிலோ அல்லது வளாகத்திலோ நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். உடற்பயிற்சி செய்யும்போது நீங்கள் வெளிப்படுத்தும் சக்தியின் விகிதாசாரம்தான் உங்களுக்கு வழிகாட்டியாக அமையும்.