தொப்பி சின்னம்தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்

Sugar & Spice, Knack Art Productions, Major Gowtham Directorial, "Kannula Kaasa Kaatappa"

ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன், தனக்கு கடந்தமுறை ஒதுக்கப்பட்ட தொப்பி சின்னத்தை மீண்டும் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இந்நிலையில், ஈபிஸ் – ஓபிஎஸ் அணிக்கு அதிமுக அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், இரட்டை இலை சின்னமும் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா – டிடிவி தினகரன் சார்பில் டெல்லி உயர் நீதிம்னறத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.அத்துடன், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஏற்கெனவே வழங்கப்பட்ட தொப்பி சின்னத்தை மீண்டும் ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரி மற்றுமொரு மனுவையும் அவர் தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து. இந்த வழக்கில் பதிலளித்த தேர்தல் ஆணையம், சுயேச்சைகளுக்கு என்ன விதிமுறை பின்பற்றப்படுமோ? அதே நடைமுறை தினகரன் தரப்புக்கும் பின்பற்றப்படும் என தெரிவித்தது.இதை ஏற்றுக் கொண்டு டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ‘‘தொப்பி சின்னம் வழங்குவது தொடர்பான முடிவை அந்த தொகுதியில் தேர்தல் அதிகாரி முடிவு செய்வார். இதில் நீதிமன்றம் தலையிடாது. எனவே மனுதள்ளுபடி செய்யப்படுகிறது’’ என தெரிவித்துள்ளது