நம் கட்சியை பலப்படுத் துங்கள். உட்கட்சி தேர்தலில் மகளிருக்கு 30 சதவீத பதவிகள் வழங்க வேண்டும் என்று தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்களுக்கு விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘உங்களுடன் நான்’ என்ற நிகழ்ச்சி மூலம் மாவட்டங்கள் தோறும் சென்று கட்சி நிர்வாகிகள், தொண் டர்களை நேரில் சந்தித்து வரு கிறார். தேமுதிகவின் உட் கட்சி தேர்தல் வரும் 9-ம் தேதி தொடங்கவுள்ளது. உட்கட்சி தேர்தலை நடத்த மொத்தம் 63 தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். இந்நிலையில், தேர்தல் பொறுப்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. இதில் தேமுதிக பொருளாளர் ஏ.ஆர்.இளங் கோவன், தலைமை நிலைய செய லாளர் ப.பார்த்தசாரதி, இளை ஞரணி செயலாளர் எல்.கே.சுதீஷ் உட்பட 63 பொறுப்பாளர் களும், அனைத்து மாவட்ட செயலாளர் களும் கலந்து கொண்டனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் இதில் கலந்துகொண்டு சுமார் 30 நிமிடங்கள் பேசினார்.
கூட்டத்தில் பேசிய விஜய காந்த், “அதிமுக தற்போது 3 அணிகளாக செயல்பட்டு வருகிறது. அதிமுகவுக்கு இனி இறங்கு முகம்தான். எனவே, தேமு திமுகவை பலப்படுத்த நீங்கள் கிளை, ஊராட்சி, பேரூராட்சி, மாவட்டம், மாநகராட்சிகளில் உறுப் பினர்களை அதிகரிக்க வேண்டும். தேமுதிகவின் உட்கட்சி தேர்தல் வரும் 9-ம் தேதி முதல் ஏப்ரல் மாதத்துக்குள் முடிவடையும்போது தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். நம் கட்சி யின் உட்கட்சி தேர்தலில் 30 சதவீதம் பதவிகளை பெண்களுக்கு வழங்க வேண்டும்.தமிழகத்தில் தற்போது அரசி யல் சூழல்கள் மாறியுள்ள நிலை யில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு, கூட்டணி அமைப்பதா? தனித்து போட்டியிடுவதா? என்பது குறித்து அறிவிப்பேன்” என்று எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.