‘சுழல் 2’ இசை மாயாஜாலம்… NEXA Streaming Academy விருதில் சிறந்த இசையமைப்பாளராக சாம் சி எஸ்

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகளில், இசையமைப்பாளர் சாம் சி எஸ், ‘சுழல் 2’ (Suzhal 2) வெப் தொடருக்காக ‘Best Original Soundtrack – Regional’ விருதை வென்று தேசிய அளவில் மேலும் ஒரு முக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

இந்த விருது விழாவில் ‘சுழல் 2’ மொத்தம் மூன்று முக்கிய விருதுகளை வென்றுள்ளது. சிறந்த பிராந்திய தொடர் (Best Series – Regional), சிறந்த பிராந்திய ஒரிஜினல் சவுண்ட்டிராக் – சாம் சி எஸ், சிறந்த நடிகை (Critics, Regional) – ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய பிரிவுகளில் வெற்றி பெற்று தனது தரத்தை மீண்டும் நிரூபித்துள்ளது.

த்ரில்லர் மற்றும் சஸ்பென்ஸ் கதைகளுக்கு உயிர் கொடுக்கும் பின்னணி இசைக்காக அறியப்படும் சாம் சி எஸ், ‘சுழல் 2’ தொடரின் மர்மம், உணர்வுகள் மற்றும் கதையின் பதற்றத்தை இசையின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியதற்காக இந்த விருதைப் பெற்றுள்ளார்.

தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக இயங்கி வரும் சாம் சி எஸ், ‘சர்தார் 2’, ‘கராத்தே பாபு’, ‘டிமான்டி காலனி 3’, ஹெச். வினோத்–தனுஷ் கூட்டணி படம் உள்ளிட்ட பல முக்கிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

‘சுழல் 2’ தொடருக்காக கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், சாம் சி எஸின் இசைப் பயணத்தில் மேலும் ஒரு பெருமைமிக்க மைல்கல்லாக அமைந்துள்ளது.