சுதந்திர தின டெல்லியில் பிரதமர்

 

 

 டெல்லி செங்கோட்டையில் கொடியற்றியதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி நாட்டுமக்களுக்கு உரையாற்றினார். அவரது உரையில், “நாட்டு மக்களுக்கு எனது கோடிக்கணக்கான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நம் நாட்டில் அனைவரும் சமமானவர்கள், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என யாரும் இல்லை. இயற்கை பேரிடர்களால் நம் நாடு சில நேரங்களில் இன்னல்களை சந்திப்பது வேதனையளிக்கிறது. கோரக்பூரில் குழந்தைகள் உயிரிழந்ததால் இந்த நாடே மன வேதனையில் உள்ளது.  நாட்டின் விடுதலைக்கும்,

வளர்ச்சிக்கும் பாடுபட்டவர்களை நான் வணங்குகிறேன். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75வது ஆண்டு விழாவை நாம் கொண்டாடி வருகிறோம்.   கூட்டாட்சி முறையால் உதய் உள்ளிட்ட திட்டங்கள் நல்ல பலனை பெற்றுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் நம் கடுமையாக உழைத்து புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். புதிய இந்தியாவை உருவாக்க 125 கோடி மக்களின் பங்களிப்பு அவசியம். ஆதார் திட்டம் மூலம் ஊழல் ஒளியும் வெளிப்படைத்தன்மை ஏற்படும். அரசுத்திட்டங்கள் தற்போது வேகம் பெற்றுள்ளன. விவசாயிகள் பல இன்னல்களை சந்தித்தாலும், சாதனைகளை புரிந்து வருகின்றனர். வேளாண் திட்டங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும். வன்முறைகளாலும், துப்பாக்கி சூட்டாலும் காஷ்மீரில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஜம்மு-காஷ்மீரை சொர்க்க பூமியாக நாம் மாற்ற முயற்சிக்க வேண்டும். ராணுவ வீரர்களின் சாதனைகளை வெளிப்படுத்த புதிய இணையதளம் தொடங்கப்படும். நாட்டின் வளர்ச்சிக்கு அரசும் நாட்டு மக்களும் தமது கடமைகளை செய்வது அவசியம்” என கூறி தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.